ஆடாதொடைக்குள் அடங்கியிருக்கும் ஆரோக்கிய நன்மைகள்

 
cold

பொதுவாக மூலிகைகளில் மிக முக்கியமானது ஆடா தோடை..இதை பல்வேறு ஆரோக்கிய நண்மைகளுக்கு நாம் பயன் படுத்தலாம் இதன் மூலம் நாம் அடையும் பயன்கள் பற்றி இந்த பதிவில் நாம் பார்க்கலாம் 

1.ஆடாதொடையின் முக்கிய செயல் சளியை வெளியே கொண்டுவருவதாகும்.

cold

2.இதன் இலையை நீரில் போட்டு காய்ச்சி குடித்து வர தொண்டை எப்பொழுதும் வலுவாக இருக்கும்.

3.வயிற்று பூச்சிகளை போக்கும் தன்மை கொண்டது இது.

4.கபகொல்லி, சளிக்கொல்லி போன்ற பெயர்களும் இதற்க்கு உண்டு . காய்ச்சலை கட்டுப்படுத்தும் தன்மையும் இதற்க்கு உண்டு

5.காசநோயினாலும் , கபத்தினாலும் அவதியுறுவோருக்கு ஆடா தொடை இலை பெரிதும் உதவுகிறது.

6.இதன் இலையைச் சுத்தம் செய்து , பொடியாக நறுக்கி , கைப்பிடியளவு எடுத்து நீர்விட்டுச் சுண்டக் காய்ச்சி வடிகட்டி காலை , மாலை தேன் சேர்த்துக் குடித்து வந்தால் கசரோகம் படிப்படியாகக் குணமடையும்.

7.நுரையீரலில் தேங்கிநிற்கும் கபத்தை சிறிது சிறிதாக வெளியேற்றும் .

8.மூச்சுத் திணறல் , இரத்தவாந்தி , இருமல் போன்ற நோய்களால் அவதியுறுவோருக்கு , ஆடாதொடை இலையைக் கசக்கிப்பீழிந்து சாறு எடுத்து தேனில் கலந்து கொடுத்து வந்தால் மூச்சுத்திணறல் உடனே நிற்கும்

8.ஆடாதோடை கண்வலி போக்கும்.

9.ஆடாதோடை வாய்வுக் கோளாறுகளை நீக்கும்.

10.ஆடாதோடை பூச்சியை கொல்லும்

11.ஆடாதோடை சிறுநீர் பெருக்கும்

12.சீத பேதியினால் பிடிச்கப்பட்ட குழந்தைகளுக்கு ஆடாதொடை இலைச்சாற்றுடன் தேன் கலந்து கொடுக்கக் குணமாகும்