முட்டையை வேகவைத்து சாப்பிடலாமா ?ஆம்லெட் போட்டு சாப்பிடலாமா ?

பொதுவாக முட்டையை பொரியல் மற்றும் ஆம்லெட்டாக எடுத்து கொள்வதை விட அவித்து சாப்பிடுவது உடலுக்கு அதிக ஊட்டச்சத்தை கொடுக்கிறது .இதன் நன்மைகள் குறித்து நாம் இப்பதிவில் பார்க்கலாம்
1. முட்டையை வறுத்து சாப்பிடும்போது அதில் உள்ள ஊட்ட சத்துக்களில் பாதிப்பு ஏற்படும் .அதனால் அதை வேக வைத்து சாப்பிடுவதால் அதிக நன்மை கிடைக்கும் .
2.இந்த முட்டை குளிர்காலத்திற்கு ஏற்ற உணவாகும் .
3.இது நம் இதயத்திற்கு அதிக நன்மை கொடுக்கிறது .இந்த வேக வைத்த முட்டையில் விட்டமின் டி உள்ளதால் இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து ,எலும்பின் ஆரோக்கியத்துக்கு வழி வகுக்கும் .
4.முட்டையின் மூலம் நாம் ஆரோக்கியமான மூளை மற்றும் முடி வளர்ச்சியை பெறலாம் .
5.மேலும் சருமத்திற்கு நன்மை செய்யும் இது நமக்கு எடை குறைப்புக்கு வழி செய்யும் .ஏனெனில் இதில் குறைந்த கலோரிகள் உள்ளது
6.அதிக அடர்த்தி கொண்ட நல்ல கொழுப்பு வேகவைத்த முட்டைகளை சாப்பிட்ட பிறகு அதிகரிக்கிறது.
7.நீங்கள் முட்டைகளை சாப்பிடும் போது கல்லீரல் குறைந்த கொலஸ்ட்ராலை உற்பத்தி செய்கிறது. எனவே இது எல்லாவற்றையும் சமன் செய்கிறது.
8.வேகவைத்த முட்டைகள் தொடர்ந்து HDL எனப்படும் நல்ல கொழுப்பை அதிகரிக்கின்றன. பல ஆய்வுகள் உயர் HDL அளவுகள் இதய நோய், பக்கவாதம் மற்றும் பிற நோய்களின் ஆபத்தை குறைக்கின்றன என்பதை நிரூபிக்கின்றன