முதுகு வலி குணமாக சில முக்கியமான தீர்வுகள்

 
back pain

பொதுவாக  வாயு பொருளை அதிகமாக சாப்பிட்டாலும் உதாரணமாக பருப்பு மற்றும் காரமான உணவுகளை அதிகம் சாப்பிடுவது போன்ற காரணத்தாலும் முதுகு வலி உண்டாகிறது .மேலும் இந்த வலிக்கான காரணம் மற்றும் தீர்வு குறித்து நாம் காணலாம்
1.இந்த முதுகு வலிக்குபுகை பிடிப்பதும் ஒரு காரணம் என கூறப்படுகிறது .சிறுநீர் ,வாந்தி ,கண்ணீர் ,ஏப்பம் ,மலம் போன்றவற்றை அடக்குவதாலும் முதுகு வலி ஏற்படுகிறது  

body pain tips
2.இந்த வலியானது முதுகில் மேல்பகுதி, நடுப்பகுதி, கீழ்பகுதி என மூன்று வகையான கட்டமைப்புகளில் வலி ஏற்படுகிறது.
3.ஒருவருக்கு பல்வேறு காரணத்தால் உண்டாகும் மனஅழுத்தமும் முதுகு வலியை ஏற்படுத்தும்.
4.மிகுந்த மனஅழுத்தத்திற்கு ஆளாகும் போது முுகு தசைகள் இறுக்கமடைய ஆரம்பித்து அந்த இடத்தில் வலி ஏற்படும்
5.மேலும் ஒருவரின் கால்களின் நீளத்தில் மில்லி மீட்டர் அளவில் வேறுபாடு இருந்தால் கூட முதுகில் பாதிப்பை ஏற்படுத்தி விடும்.
6.அதனால் கால்களின் உயரத்தை சீராக்கும் விதத்தில் ஷூக்களை அணிவது நல்லது.
7.தசை நார்களில் ஏற்படும் காயங்களுக்கும், முதுகு வலிக்கும் தொடர்பு இருக்கிறது.