இந்த டீக்குள் இவ்ளோ நன்மை ஒளிஞ்சிருக்கா ?இது தெரியாம போச்சே ..

 
tea

பொதுவாக ஏலக்காய் டீ குடிப்பதால் நம் உடலுக்கு நிறைய ஆரோக்கியம் உண்டு .இதனால் கிடைக்கும் நன்மைகள் குறித்து இந்த பதிவில் நாம் பார்க்கலாம்.

1.இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலானோருக்கு காலை விடியும் பொழுதே டீயுடன் நாளை தொடங்குவது வழக்கம்.
2.ஏனெனில் உடலை புத்துணர்ச்சியாகவும் ஆற்றலாகவும் வைத்திருக்க உதவுகிறது.
3.குறிப்பாக ஏலக்காய் டீ குடிக்கும் போது அது நம் உடலுக்கு சில ஆரோக்கிய நன்மைகளை கொடுக்கிறது என்று உங்களுக்கு தெரியுமா?
4.. ஆரோக்கியம் நிறைந்த உணவுப் பொருள்களில் முக்கியமான ஒன்று ஏலக்காய் என அனைவருக்கும் தெரியும். இதில் எண்ணற்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது.

yelakkai

5.இதை பயன்படுத்தி டீ போட்டு குடித்து வரும்போது செரிமானம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளான அஜீரணம், மலச்சிக்கல் பிரச்சனையிலிருந்து விடுபட உதவுகிறது.

6.இது மட்டும் இல்லாமல் இதயம் சம்பந்தப்பட்ட பிரச்சனையில் இருந்து விடுபடவும் வாய் துர்நாற்றம் ஏற்படுவதில் இருந்தும் நம்மை பாதுகாத்துக் கொள்ளலாம்.

7.குறிப்பாக உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தியை கொடுத்து உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள இந்த ஏலக்காய் டீ பயன்படுகிறது.
8.எனவே உடலுக்கு ஆரோக்கியம் நிறைந்த ஏலக்காய் டீ குடித்து உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம்.