வெல்லம் கலந்த நீர் எந்தெந்த நோயை குணமாக்கும் தெரியுமா ?

 
vellam vellam

பொதுவாக  வெள்ளை சர்க்கரையை அதிகம் சாப்பிடுவதை விட வெல்லம் சாப்பிட்டால் நம் உடலுக்கு பல ஆரோக்கிய நன்மைகள் உண்டு .அது பற்றி இந்த ப்பதிவில் பார்க்கலாம் 
1.சிலருக்கு மூட்டு வலியிருக்கும் .வெல்லம் எலும்புகளை வலுவாக்கும்,மூட்டுவலி போன்ற எலும்புக் கோளாறுகளைக் குணப்படுத்தும் , . 
2.சிலர் உடலில் ஹீமோகுளோபின் குறைவாக இருக்கும் .இப்படியிருந்தால் , வெதுவெதுப்பான நீரில் வெல்லம் கலந்து குடிப்பது நல்லது. 
3.மேலும் சரும பொலிவிற்கு பியூட்டி பார்லர் சிலர் போவார்கள் .ஆனால் வெதுவெதுப்பான நீரில் வெல்லத்தை தொடர்ந்து குறைந்த அளவில் உட்கொண்டால், உங்கள் சருமத்திற்கு தேவையான பளபளப்பு பியூட்டி பார்லர் போகாமலே கிடைக்கும், 
4.வெல்ல நீர் அடிக்கடி சாப்பிட்டால்  தீங்கு விளைவிக்கும் நச்சுகள் உடலில் இருந்து வெளியேற்றப்படும்.
5.இரத்த சோகை உள்ள பெண்களும் வெதுவெதுப்பான நீரில் வெல்லம் சாப்பிடலாம்.
6.வெல்லம் இயற்கையாகவே உடல் நச்சை நீக்குகிறது, 
7.வெல்லம் கலந்த நீர் இரத்தத்தை சுத்தப்படுத்துகிறது, 
8.வெல்லம் கலந்த நீர் கல்லீரலை சுத்தப்படுத்துகிறது.  
9.சிலர் எடை குறைக்க நினைப்பர் .அவர்கள்  வெதுவெதுப்பான நீரில் வெல்லம் சேர்த்து வாரத்திற்கு இரண்டு அல்லது மூன்று முறை மாற்று நாட்களில் மட்டும் குடிக்கவும்.