செம்பருத்தி இலைகளை தூள் செய்து சாப்பிட எந்த நோய் குணமாகும் தெரியுமா ?

 
sembaruthi tea health tips sembaruthi tea health tips

பொதுவாக  பாட்டி வைத்தியம் மூலம் பல்வேறு நோய்களை செலவின்றி குணப்படுத்தலாம் .அப்படி சில வைத்திய முறைகளை பார்க்கலாம் 

1.சிலருக்கு தீராத வாயு தொல்லை இருக்கும் .அவர்கள் வேப்பம் பூவை உலர்த்தி தூளாக பொடிசெய்து
வெந்நீரில் உட்கொண்டு வர வேண்டும் .அப்படி தொடர்ந்து சாப்பிட்டால்  வாயுத்தொல்லை
நீங்கும்.
2.ஒரு சிலருக்கு தீராத தலை வலி இருக்கும் .அவர்கள் ஒரு சிறு துண்டு சுக்கு, 5 துளசி இலை , 2 லவங்கம்
சேர்த்து நன்கு அரைத்து நெற்றியில் பற்றாகப் போட்டு வர வேண்டும் .அப்படி தொடர்ந்து 
போட்டால் தலைவலி மாயமாய் மறைந்து போகும் 
3.ஒரு சிலருக்கு தீராத மலசிக்கல் தொல்லை இருக்கும் .அவர்கள் செம்பருத்தி இலைகளை தூள் செய்து, தினமும் இருவேளை சாப்பிட்டு வரவேண்டும் .அப்படி தொடர்ந்து சாப்பிட  மலச்சிக்கல் தீரும்.
4.சிலருக்கு தொண்டையில் சளி கட்டி கொண்டு தொண்டை கரகரப்பாக இருக்கும் ,அவர்கள் திப்பிலி, ஏலரிசி, சுக்கு, பால் மிளகு ஆகியவற்றை வறுத்து பொடி செய்து தேனில் கலந்து சாப்பிட வேண்டும் .அப்படி சாப்பிட 
தொண்டை கரகரப்பு குணமாகும்.
5.சிலருக்கு சளி தொல்லை இருக்கும் .அவர்கள் தேங்காய் எண்ணையில் கற்பூரம் சேர்த்து நன்கு
சூடாக்கி ஆறவைத்து நெஞ்சில் தடவ சளியிலிருந்து நிவாரணம் கிடைக்கும் .
6.சிலருக்கு தீரா விக்கல் இருக்கும் .அவர்கள் தேனில் நெல்லிக்காய் சாறு சேர்த்து சாப்பிட்டால் விக்கல் தீரும்.