பூ வைக்க விரும்பாத மாடர்ன் மங்கையரே !பூ சூடுவதால் உண்டாகும் நன்மை என்னவென்று தெரியுமா?

 
Flower

பெண்கள் பூ வைத்து கொள்வதால் அழகு மட்டுமல்ல அவர்களின் ஆரோக்கியமும் அதிகரிக்கும் .பூ வைப்பதில் பல மருத்துவ உண்மைகள் அடங்கியுள்ளது .எந்த பூவை வைத்து கொண்டால் என்னென்ன நன்மை கிடைக்குமென்று நாம் பார்க்கலாம் 
பூக்களின் பயன்கள்

ரோஜாப்பூவை பெண்கள் சூடிக்கொண்டால்  அவர்களுக்கிருக்கும் தலைச்சுற்றல், கண் நோய் போன்ற நோய்கள் காணாமல் போகும் .

health tips of roja flower

மல்லிகைப்பூவை மங்கையர் வைத்து கொண்டால் அவர்களுக்கு   மனஅமைதி கொடுப்பதோடு அவர்களின்  கண்களுக்குக் குளிர்ச்சி கொடுத்து கண்களை குளுகுளுவென்று வைத்திருக்கும் 

செண்பகப்பூ வை பெண்கள் தலையில் வைத்து கொண்டால் அது  வாத நோயை  குணப்படுத்தி அவர்களின் . பார்வைத் திறனை மேம்படுத்தும்.

பாதிரிப்பூவை பெண்கள் தலையில் வைத்து கொண்டால் அது காது கோளாறுகளைக் குணப்படுத்தும். செரிமானச் சக்தியை மேம்படுத்தும். காய்ச்சல், கண் எரிச்சல் போன்றவற்றைச் சரிசெய்யும் சக்தி கொண்டது 

செம்பருத்திப் பூவை பெண்கள் தலையில் வைத்து கொண்டால் தலைமுடி தொடர்பான பிரச்னைகளை சரிசெய்து  உடல் உஷ்ணத்தைக் குறைக்கும் வளமை படைத்தது 

மகிழம் பூவை பெண்கள் தலையில் வைத்து கொண்டால் தலை சம்பந்தப்பட்ட பிரச்னைகளைத் தீர்த்து  பல் குறைபாடுகளை நீக்கும்.

வில்வப் பூவை பெண்கள் தலையில் வைத்து கொண்டால் சுவாசத்தைச் சீராக்கும். காச நோயைக் குணப்படுத்தும்.

சித்தகத்திப் பூ வை பெண்கள் தலையில் வைத்து கொண்டால்தலை வலியைக் குறைக்கும். மூளை சுறுசுறுப்பாக இயங்க உதவும்.

தாழம் பூவை பெண்கள் தலையில் வைத்து கொண்டால் நறுமணம் வீசுவதோடு சீரான தூக்கத்துக்கு உதவும். உடல் சோர்வை நீக்கும்.

தாமரைப் பூவை பெண்கள் தலையில் வைத்து கொண்டால்தலை எரிச்சல், தலை சுற்றல் போன்றவற்றைச் சரிசெய்யும். மனஉளைச்சலை நீக்கி மனஅமைதிக்கு வழிவகுக்கும். தூக்கமின்மையை நீக்கி, சீரான தூக்கத்தை ஊக்குவிக்கும்.

கனகாம்பரம் பூவை பெண்கள் தலையில் வைத்து கொண்டால் தலை வலி மற்றும் தலை பாரத்தைச் சரிசெய்யும்.

.