மீனுடன் எந்த உணவை சேர்த்து சாப்பிட கூடாது தெரியுமா ?

பொதுவாக உடல் ஆரோக்கியத்துக்கு அடிக்கடி சிலவகை மீன்களை சமைத்து சாப்பிட்டால் நலம் ..சில வகை உணவை மீனுடன் சாப்பிடுவதை தவிர்க்கலாம் .அது பற்றி நாம் இப்பதிவில் காணலாம்
1.அப்படிப்பட்ட ஒரு உணவு தான் பாலும் மீனும் இதனை ஒன்றாக சேர்த்து சாப்பிடுவது ஆபத்தானது என்று சொல்லப்படுகின்றது.
2.ஆயுர்வதத்தின் படி மீன் என்பது அசைவ உணவை சேர்ந்தது, பாலானது விலங்கிலிருந்து பெறப்படும் பொருளாக இருந்தாலும் அது சைவ உணவுவகையை சார்ந்தது இதனால் இந்த இரண்டு உணவையும் கண்டிப்பாக சாப்பிடக்கூடாது கூறுகின்றது.
3.மீன் சரியாக சமைக்கப்படாததாக இருந்தாலோ அல்லது உங்களுக்கு லாக்டோஸ் சகிப்புத்தன்மை பிரச்சினை இருந்தால் மட்டுமே இந்த இரண்டு உணவையும் ஒரே நேரத்தில் சாப்பிடக்கூடாது.
4.மீறி சாப்பிட்டால் அலர்ஜிகள், சரும பிரச்சினைகள், வயிறு கோளாறுகள் போன்ற பிரச்சினைகள் ஏற்படலாம்.
5.பால் குளிர்ச்சி தன்மையுடையது, அதேபோல மீன் வெப்பத்தன்மையுடையது.
6.இது இரண்டும் ஒரேநேரத்தில் சாப்பிடப்படும் போது அது உங்கள் உடலில் சமநிலையின்மையை ஏற்படுத்தும், இதனால் உங்கள் உடலில் இரசாயன மாற்றங்கள் ஏற்படலாம்.