நாம் சம்மரில் குடிக்கும் இந்த பானத்தால் நம் உடலுக்கு உண்டாகும் கேடுகள்

 
cool drinks

பொதுவாக நம் முன்னோர்கள் தாகமெடுத்தால் கூல்ட்ரிங்க்ஸ் குடிக்காமல் மோர் ,இளநீர் ,என்று குடிக்க சொன்னார்கள் .அவர்களும் அதை குடித்து ஆரோக்கியமாய் இருந்தார்கள் .இந்த கூல்ட்ரிங்க்ஸ் குடிப்பதால் உண்டாகும் தீமைகள் பற்றி இப்பதிவில் நாம் காணலாம்
1..குளிர்பானத்திலிருந்து வரும் வாயுக்கள் நம் பற்களை பதம் பார்க்கும் .வெகு சீக்கிரத்திலேயே பற்களின் எனாமலை அரித்து பற்கள் விழ காரணமாய் இருக்கின்றன .
2.மேலும் அதிலிருக்கும் கெமிக்கல் நமக்கு எலும்பு சிதைவு நோயை உண்டு பண்ணுகிறது  

bone
3.அந்த குளிர்பானத்தில் வைட்டமின், தாது உப்புக்கள், மாவுச் சத்து எதுவும் இல்லை.
4.குளிர்பானம் குடிப்பதால்  வயிற்றில் அமிலச் சுரப்பு (அஸிடிட்டி) உருவாகி செரிமானக் கோளாறு வரும்.
5.குளிர்பானம் குடிப்பதால் வயிற்றில் வாயுத் தொல்லை உருவாகும்.
6.குளிர்பானம் குடிப்பதால் உடல் பருமன் ஏற்படும்.
7.குளிர்பானம் குடிப்பதால் அதற்குள் செயற்கைக் கலர் (சிந்தடிக்) சேர்க்கப்படுவதால் உடல்நலம் கெடும்.
8.குளிர்பானம் குடிப்பதால் அதற்குள் சுவைக்குச் சேர்க்கப்படும் இரசாயனங்களால் உடலுக்கு கேடு உண்டாகும்