கொத்தமல்லி பானம் கொத்தியெடுக்கும் நோய்கள் பத்தி தெரிஞ்சிக்கோங்க

 
koththamalli

பொதுவாக காய் கறி கடையில் கடைசியில் கொசுறாக கொடுக்கப்படும் கறி வேப்பிலை மற்றும் கொத்தமல்லியில் நம் உடலுக்கு தேவையான பல்வேறு ஆரோக்கிய நன்மைகள் உண்டு .இது கொலஸ்ட்ரால் முதல் ரத்த அழுத்தம் வரை குணமாக்கும் .

இந்த பதிவில் கல்லீரலை சுத்தம் செய்யும் அற்புதமான  கொத்தமல்லி பானம் எப்படி செய்வது என்று பார்ப்போம் -

Liver

1.கொத்தமல்லி பானம் செய்வதற்கு கொத்தமல்லித்தழை – 4 கைப்பிடி அளவு எடுத்து கொள்வோம்

2.அந்த கொத்தமல்லி தழையுடன் பூண்டு – 4 பல் எடுத்து கொள்வோம்

3.அடுத்து கொத்தமல்லி தழையுடன் பூண்டுடன் உப்புதேவைக்கேற்ப எடுத்து கொள்வோம்

4.எலுமிச்சை சாறு – 4 ஸ்பூன் மற்றும் தண்ணீர்தேவைக்கேற்ப எடுத்து கொள்வோம்

5.கொத்தமல்லி பானம் செய்வதற்கு முதலில் கொத்தல்லி நறுக்கி சுத்தம் செய்து, அதை மிக்ஸியில் நன்றாக அரைத்துக் கொள்ளுங்கள்.

 6.அடுத்து அரைத்த கொத்தமல்லி தழையுடன்  பூண்டு, சிறிதளவு உப்பு சேர்த்து நன்றாக அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள்.

7.பின்னர் இந்த அரைத்த ஜூஸை நன்றாக வடிக்கடி அதில் எலுமிச்சை சாற்றை பிழித்து எடுத்து கொள்ளுங்கள்

8. தினமும் காலையில் வெறும் வயிற்றில் தண்ணீர் அருந்தி, அரை மணி நேரம் கழித்து இந்த கொத்தமல்லி பானத்தை குடிக்க வேண்டும்.

9.இப்படி தினமும் செய்து வந்தால் கல்லீரலில் தேவையற்ற கெட்ட நச்சுக்கள் வெளியேறிவிடும். 10.இந்த 10.இந்த கொத்தமல்லி பானத்தை குடித்து வந்தால் வாயுத்தொல்லை ஏற்படாது.

11.இந்த கொத்தமல்லி பானத்தை குடித்து வந்தால் ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவு குறையும்.