பெண்களே முகத்தில் முடி வளருதா ?வீட்டிலேயே செலவில்லாமல் நீக்கும் முறை

 
women

 
சில பெண்களின் உதட்டிற்கு மேல் முடி வளர்ந்து அது அவர்களின் அழகை கெடுக்கும் .இதனால் அவர்கள் வெளியே செல்லவே கூச்சப்பட்டுக்கொண்டு வீட்டிலேயே இருப்பார்கள் .இன்னும் சிலர் அழகு நிலையத்திற்கு சென்று பணத்தை கொட்டுவார்கள் .ஆனாலும் அது தற்காலிக தீர்வைத்தான் கொடுக்கும் .இதற்க்கு வீட்டில் இருக்கும் பொருளை கொண்டு எளிய சிகிச்சை  முறைகளை நங்கள் பட்டியலிட்டுள்ளோம் படித்து பயன் பெறுங்கள் 


பின் வரும் குறிப்புகளை படித்து தெரிந்து கொண்டு முயற்சி செய்து பாருங்கள்.இந்த எளிய செலவில்லாத வீட்டு சிகிச்சை முறையால் எந்த பக்க விளைவும் இல்லாமல் இருக்கலாம் .அதனால் படித்து பார்த்து பலன்  பெறுங்கள் 

turmeric


1.மஞ்சள் தூள்
பெண்களின் உதடுகளுக்கு மேல் வளரும் தேவையற்ற முடியைப் போக்குவதில் மஞ்சள் சிறந்த பொருளாக உள்ளது. ஆகவே மஞ்சள் தூளை பாலில் சேர்த்து கலந்து பேஸ்ட் செய்து, அதனை உதடுகளுக்கு மேல் தடவி, உலர வைத்து, பின் நன்கு தேய்த்து கழுவ வேண்டும். இப்படி தினமும் ஒரு மாதத்திற்கு செய்து வந்தால், உதடுகளுக்கு மேல் வளரும் முடியின் வளர்ச்சி நாளடைவில் நின்றுவிடும்.


முதல் சிகிச்சை மஞ்சள் தூள் முறை :
முதலில் சிறிது அளவு மஞ்சள் தூளை எடுத்து கொள்ளுங்கள் .அதனுடன் கொஞ்சம் பால் ஊற்றி பேஸ்ட் போல குழைத்து கொள்ளுங்கள் .இந்த மஞ்சள் தூள் பேஸ்ட்டை இரவில் தூங்க போகும் முன்பு உதட்டில் முடி வளர்ந்த இடத்தில்  பூசி விட்டு படுத்து கொள்ளுங்கள் .மறுநாள் எழுந்து முகத்தை கழுவி விடுங்கள் .இப்படி தொடர்ந்து ஒருமாதம் செய்தால் நல்ல பலன் கிடைக்கும் .ஏனெனில் மஞ்சளுக்கு முக அழகை பராமரிக்கும் ஆற்றல் உண்டு 
 
எலுமிச்சை சிகிச்சை முறை 

எலுமிச்சை பழத்தின் எலுமிச்சை சாற்றில் சர்க்கரை மற்றும் சிறிது நீர் சேர்த்து கலந்து கொள்ளுங்கள் ., இந்த எலுமிச்சை நன்னீரை  உதட்டிற்கு மேலே தடவி 15-20 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். அதிலும் இதனை வாரத்திற்கு மூன்று முறை செய்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.ஏனெனில் எலுமிச்சைக்கு இந்த முடியை அகற்றும் பவர் உண்டு 

முட்டை சிகிச்சை முறை 
கோழி முட்டையின் வெள்ளைக் கருவை மட்டும் தனியாக எடுத்து கொள்ளுங்கள் .பின்னர் இந்த வெள்ளை கருவுடன்  சோள மாவு மற்றும் சர்க்கரை சேர்த்து கெட்டியான பேஸ்ட் போல் கலந்து கொள்ளுங்கள் .இந்த பேஸ்ட்டை , முடியுள்ள  உதடுகளுக்கு மேல் தடவி உலர வைத்து உரித்து எடுக்க வேண்டும். இந்த முறையை அடிக்கடி சோம்பல் படாமல்  செய்துவர , நாளடைவில் முடியின் வளர்ச்சி நின்று முகம் புது பொலிவுடன் திகழும்