மலச்சிக்கல் வயிற்று வலி போன்ற பிரச்சனையில் இருந்து காக்கும் இந்த கீரை

 
greens

வெந்தயக் கீரையில் இருக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம்.

1.அனைவரும் விரும்பி உண்ணும் கீரைகளில் ஒன்று வெந்தயக் கீரை. இது உடலுக்கு ஆரோக்கியத்தை கொடுக்கிறது.

2.குறிப்பாக நீரிழிவு நோயாளிகளுக்கு இது ஒரு வரப்பிரசாதமாக இருக்கிறது.

vendhaya keerai

3.ஏனெனில் இது ரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவுகிறது.

4.உடல் எடையை குறைக்க நினைப்பவர்களுக்கு இது உதவுகிறது.

5.குறிப்பாக செரிமான பிரச்சனையில் இருந்து விடுபட உதவுகிறது. மலச்சிக்கல் வயிற்று வலி போன்ற பிரச்சனையில் இருந்தும் விடுபடலாம்.

6.இதில் வைட்டமின் கே நிறைந்திருப்பதால் எலும்புகளுக்கு வலுப்படுத்த உதவுகிறது.

7.மேலும் இதில் பொட்டாசியம் நிறைந்து இருப்பதால் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துவது மட்டுமில்லாமல் இதயம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளில் இருந்தும் விடுபட உதவுகிறது.

எனவே ஆரோக்கியம் தரும் வெந்தய கீரையை உணவில் சேர்த்து உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம்.