வல்லாரை கீரை பொடியை பாலில் கலந்து உண்டு வந்தால் நடக்கும் அதிசயம்

 
greens

பொதுவாக மனித உடலின் முக்கியமான பகுதி எதுவென்று கேட்டால் அது மூளைதான் .அந்த மூளை சிறப்பாக செயல் பட என்ன தேவையென்று இப்பதிவில் நாம் காணலாம்
1.மூளை சிறப்பாக செயல்பட ,வால்நட் ,மாதுளை பழம் ,முட்டை போன்ற உணவுகள் முக்கியம்  .

brain

2.நம் மூளை சிறப்பாக செயலாற்ற வல்லாரை கீரையின் பங்கு முக்கியமானது மூளைக்கு வேண்டிய ஊட்டச்சத்துக்களை அள்ளி கொடுப்பதில் வல்லாரைக்கு நிகர் எதுவும் இல்லை .
3.அதனால் தான் வல்லாரை உண்டோரிடம் மன்றாடாதே என்று கூட சொல்வதுண்டு இது மூளையின் நரம்புகளை தூண்டிவிட்டு எப்போதும் நம் மூளையை உயிர்ப்புடன் வைத்திருக்கும்
4.அதிக ஞாபக மறதியுள்ளவர்கள் வல்லாரை கீரையை தினமும் உணவில் சேர்த்துக்கொண்டால் நியாபக சக்தி பெருகும்.
5.மேலும் இதை தினமும் உணவில் சேர்த்துக்கொள்ள முடியாதவர்கள் கவலை வேண்டாம் அதற்கும் வேறு வழியுள்ளது .
6.இந்த  வல்லாரை கீரையை நிழலில் காயவைத்து பொடி செய்து தினமும் அரை ஸ்பூன் பொடியை பாலில் கலந்து உண்டு வந்தால் குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கு ஞாபக சக்தி பெருகும் .