வாய்வு தொல்லையை போக்க இந்த கீரை உதவும்

 
Gas Gas


பொதுவாக ஒவ்வொரு கீரையிலும் ஒவ்வொரு மருத்துவ குணமுள்ளது .அரை கீரையால் மலசிக்கல் குணமாகும் .வல்லாரை கீரையால் ஞாபக சக்த்தி பெருகும் .அதே போல் புதினா கீரையால் என்ன நன்மை உண்டு என்று இந்த பதிவில் பார்க்கலாம் 

1.புதினா கீரையானது மணமும், காரமும், அதிக ஊட்டச்சத்தும் உள்ள ஒரு மூலிகை செடியாகும்  
2.புதினா கீரையை  துவையல் செய்து அடிக்கடி சாப்பிட்டால் நமது உடலில் உள்ள இரத்தம் சுத்தமாவதோடு புதிய இரத்தமும் உற்பத்தியாகி ஆரோக்கியம் மேம்படும் .
3.புதினா கீரை நமது வயிற்று புழுக்களை அழிக்க வல்லது .மேலும்   வாய்வு தொல்லையை போக்கவும் இந்த புதினா கீரையானது மருந்தாக பயன்படுகிறது.
4.சிலருக்கு வயிற்று போக்கு அதிகமாக இருக்கும் ,.அவர்கள்  புதினா துவையலோ அல்லது சட்னியாகவோ சாப்பிட்டால் உடனடியாக வயிற்று போக்கு நீங்கும்.
5.சில இருக்கும் ஆண்களுக்கு ஆண்மை குறைவை போக்கும் சக்தி புதினா கீரைக்கு உள்ளது.
6.சிலர் உடல் தொப்பை, பருமன் கொண்டு இருப்பர் .அவர்கள் இந்த கீரையை சாப்பிட்டால் அது  குறைகிறது.
7.நம் உடலில் அழிந்த திசுக்கள் புதினா மூலம் புதுப்பிக்கப்படும். 
8.புதினா சேர்த்து கொண்டால் காலரா அண்டாது.