இந்த பச்சை நிற உணவுகள் எந்த உறுப்பை காக்கும் தெரியுமா ?
பொதுவாக ஒரு மனிதனுக்கு இதயம் உயிர் வாழ முக்கியமான உறுப்பு ஆகும் .ஆனால் இந்த இதயத்தை தவறான உணவு பழக்கத்தால் நாம் பலவீனமடைய செய்கிறோம் .அதனால் இந்த இதயத்தை பலமாக வைத்திருக்க சில பச்சை நிற உணவுகள் முக்கியம் அந்த பச்சை நிற உணவு பட்டியலை நாம் பார்க்கலாம்
1.பொதுவாக நமது இதயத்தை பாதுகாக்க ,தினம் மதியம் பச்சை உணவுகளை சாப்பிடலாம்
2.ஏனெனில் பச்சை நிறமுள்ள கீரைகள், காய்கறிகள், முதலியவைகளில் பொட்டாசியம், கால்சியம், மக்னீசியம் போன்ற சத்துக்கள் ஏராளமாய் உள்ளன.
3.ஒருவரின் பலவீனமான இதயத்தையும் எலும்புகளையும் இந்த தாது உப்புக்கள் பலப்படுத்துகின்றன.
4.மேலும் இந்த பச்சை நிற உணவுகள் இதயம் சிறப்பாக இயங்கவும் தூண்டிக் கொண்டே இருக்கின்றன.
5.எனவே மதிய உணவில் ஒரு ரொட்டி அல்லது ஒரு பாண்துண்டு சாப்பிடவும்
6.அந்த துண்டுடன் வெங்காயம், மிளகாய், சீஸ், வெள்ளரிக்காய், முதலியவற்றை காய்கறி சாலட்டாக ஒரு கிண்ணம் சாப்பிடவும்.
7..இத்துடன் இதயத்தினை பலமாக்க ஒரு தேக்கரண்டி ஆலிவ் ஒயில் சாப்பிடவும்.
8..அத்துடன் 50 கிராம் ஏதாவது ஒரு கீரையை அவியலாகச் சாப்பிடவும்
9.மேலும் காய்கறி சூப்புடன் ஒரு துண்டு ரொட்டி சாப்பிடவும்
10. அது மட்டுமல்லாமல் பொட்டாசியம், கால்சியம், மக்னீசியம் போன்ற சத்துக்கள் உள்ள பச்சை நிற திராட்சை சாப்பிடலாம்.

