மருந்து மாத்திரைகளை தூக்கி போட வைக்கும் பாட்டி வைத்தியம்
எதற்கெடுத்தாலும் ஆங்கில வைத்தியத்துக்கு ஓடும் இந்த காலத்து மக்களுக்கு அந்த காலத்து பாட்டி வைத்தியம் பற்றி தெரிந்திருக்க வாய்ப்பில்லை .ஏனென்றால் பாட்டிகள் பெரும்பான்மையான வீடுகளில் வைத்து கொள்வதில்லை .அவர்கள் வீட்டிலிருந்தால் இந்த வைத்திய முறைகளை பற்றி கூறுவர் .இந்த பாட்டி வைத்தியத்தில் ஆங்கில மருந்து போல எந்த விதமான பக்க விளைவுகளும் இருக்காது .இந்த வைத்ய முறைகள் சிலவற்றை கொடுத்துள்ளோம்
1.சிறுநீர் கழிக்கும்போது ஏற்படும் எரிச்சல் மாற வெண்டைக்காய் விதையை எடுத்து பார்லி கஞ்சியில் போட்டு காய்ச்சி தொடர்ந்து மூன்று நாள் வரை சாப்பிட்டு வந்தால் போதும்

2.அஜீரணத்தால் பசியின்றி இருப்போர் புதினா சாறு 1 பங்கு, எலுமிச்சம் பழச்சாறு 3 பங்கு கூட்டி கொஞ்சம் சர்க்கரை சேர்த்து சாப்பிட்டால் நன்றாக பசியெடுக்கும் .
3.தேங்காய் எண்ணையில் கற்பூரம் சேர்த்து நன்கு சுடவைத்து ஆர வைத்து நெஞ்சில் தடவி வந்தால் நெஞ்சு சளி கரைந்து விடும் .
4கொழுப்பு கரைய .உணவு சாப்பிடுவதற்கு அரை மணி நேரத்திற்கு முன்னதாக சுடுதண்ணீர் குடித்தால் போதும் .
5. அசைவ உண்ட உடனே ஒரு பெரிய டம்ளர் நிறைய எலுமிச்சை சாறு கலந்து அதில் சர்க்கரைக்கு பதிலாக உப்பு சேர்த்து குடித்தால் அசைவ உணவு சாப்பிட்டால் ஏற்படும் வயிறு மந்தம் தீரும்
6. வாய்ப்புண் உள்ளவர்களுக்கு தேங்காய்த் துண்டுகளை மென்று சாப்பிட்டால் வாய்ப்புண் எளிதில் ஆறும்.
7.சீதளபேதி குணமாக ஜாதிக்காயைச் சிறு சிறு துண்டுகளாகச் சீவி, அதை நெய்விட்டு வறுத்து சாப்பிட்டு வந்தால் போதும்


