தேன் கலந்து இஞ்சி டீ குடிச்சா என்னாகும் தெரியுமா ?

 
honey

நாம் உண்ணும் உணவு சரியாக ஜீரணம் ஆகவில்லையென்றால் அது குடலில் தங்கி வாயு தொல்லை முதல் வயிறு உப்பிசம் வரை பல்வேறு உடல் நல கோளாறுகளை ஏற்படுத்தும் .பலர் இந்த பிரச்சினைக்கு சிகிச்சை எடுத்து கொள்ளாமல் விடுவதால் அது நாளடைவில் அல்சராக மாறி விடுகிறது எனவே செரிமான கோளாறு இருந்தால் வெறும் வயிற்றில் வெது வெதுப்பான நீர் பருகலாம் மேலும் வேறு என்னென்ன இயற்கை வைத்தியம் செய்யலாம் என்று பார்க்கலாமா

1சிலர் செரிமான கோளாறால் அவதி படுவதுண்டு . எனவே வயிற்று உப்புசம் மற்றும் அஜீரணம் போன்ற கோளாறுகள் இருந்தால் இஞ்சி டீயை  தேன் கலந்து குடித்து வந்தால் அந்த பிரச்சினை நீங்கும்

Ginger

2.ஒரு ஸ்பூன் சீரகத்தை இரவு முழுவதும் ஊற வைத்து காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வரலாம். காலையில் வெறும் வயிற்றில் சீரக விதைகளை சாப்பிடுவது சீரண சக்தியை மேம்படுத்த உதவுகிறது.

3.தினமும் ஒரு கப் புதினா தேநீர் குடித்து வருவது உங்கள் குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தி உங்களை ஆரோக்கியமாய் வைக்கிறது

4.உங்கள் செரிமான ஆரோக்கியத்தை மேம்படுத்த பெருஞ்சீரக விதைகள் கொண்டு தேநீர் போட்டு குடித்து வந்தால் போதும் .

5.முட்டைகோசு சாறை தனியே சாப்பிட முடியாவிட்டால் மற்ற காய்கறிகளின் சாறுடன் கலந்து சாப்பிட்டு உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தலாம் .

6.சாப்பிடுவதற்கு அரை மணி நேரத்திற்கு முன் இஞ்சி டீ குடித்து வந்தால் அது நம் குடலின் செரிமானத்திற்கு தேவையான சுரப்பிகளின் செயல்பாடுகளை தூண்டி விடுகிறது.