நல்லெண்ணெய் கால் பெருவிரலில் வச்சா ,நம் உடலில் நடக்கும் அதிசயம்

 
of oil for your heart

நம் உடல் விரைவில் உஷ்ணமடைய முக்கிய காரணம் நாம் அதிக நேரம் உட்கார்ந்த இடத்திலே  வேலை பார்ப்பது ,மற்றும் நம் முன்னோர்கள் சொன்ன உணவு முறையை தவிர்த்து விட்டு ,பாஸ்ட் புட் கலாச்சாரத்துக்கு மாறியது ,மேலும்  வெயிலில் அதிக நேரம் சுற்றுவது போன்றவை ஆகும் .அது  மட்டுமின்றி பருவ நிலை மாற்றமும் நம் உடல்நிலை சூடு ஆக காரணமாக விளங்குகிறது .

இதன் காரணமாக நமக்கு தோல் வியாதி முதல் பல உடல்  நல கோளாறுகள் உண்டாகிறது .உதாரணமாக முடி கொட்டுதளில்  ஆரம்பித்து ,வயிற்று வலி  மற்றும் முகப்பருக்கள் தோன்றி தொல்லை கொடுக்கிறது .மேலும் உச்சி முதல் பாதம் வரை பல நோய்களுக்கு ஆட்பட்டு அவதியுறுகிறோம்  

oil


இதற்கு சரியான தீர்வு நம் முன்னோர்கள் பயன்படுத்திய நல்லெண்ணெய் வைத்தியம் ஆகும் .அதன் படி நல்லெண்ணெயை ஒரு கரண்டியில் எடுத்துக்கொண்டு அதை சூடாக்கி பின்னர் அதில் மிளகு மற்றும் தோல் உரிக்காத பூண்டு போன்றவற்றை இட்டு ,சூடு ஆறிய பின் நம் கால் பெருவிரலில் வைக்கவும் .இரண்டு நிமிடம் கழித்து  அதை துடைத்து விடவும் .இரண்டு நிமிடங்களுக்கு மேல் அதை  வைக்க வேண்டாம் .சளி மற்றும் காய்ச்சல் உள்ளவர்கள் இதை முயற்சி செய்ய வேண்டாம் .இதை செய்தால் உடல் உஷ்ணம் குரைந்து உடல்  கூல் ஆவதை காண்பீர்கள் .மேலும் இதுபோல் வாரமொருமுறை நல்லெண்ணெய் தலைக்கு தேய்த்தும் குளித்து உடல் சூட்டை குறைக்கலாம்