சிறுநீரகக் கோளாறு போக்கும் மூக்கிரட்டை!

 

சிறுநீரகக் கோளாறு போக்கும் மூக்கிரட்டை!

சிறுநீரகச் செயலிழப்பு… மாறிவிட்ட உணவுமுறை, வேலைச்சூழல் என பல்வேறு காரணங்களால் இந்த பாதிப்பு ஏற்படுவதாகக் கூறப்படுகிறது. அடிப்படையில் நீர் அருந்துவதில் தொடங்கி உணவு உண்ணும் முறை என நிறைய வழிமுறைகளை கடைபிடித்தால் சிறுநீரகச் செயலிழப்பு ஏற்படாமல் தடுக்கலாம். பொதுவாக தினமும் மூன்று முதல் மூன்றரை லிட்டர் நீர் அருந்த வேண்டியது அவசியம்.

சிறுநீரகக் கோளாறு போக்கும் மூக்கிரட்டை!

உப்பு – நீர்:
சிறுநீரகச் செயலிழப்பு ஏற்பட்டால் நீர் அருந்தும் விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும். அதேபோல் உண்ணும் உணவில் உப்பு சேர்த்துக்கொள்வதில் அதிக கவனம் தேவை. மேலும் சிறுநீரை நன்றாக வெளியேற்ற உதவும் வாழைத்தண்டினை 15 நாள்களுக்கு ஒருமுறை சாறு எடுத்து அருந்தலாம். வாழைப்பூ, முள்ளங்கி, பார்லி, வெள்ளரி போன்றவற்றை வாரத்தில் இரண்டு, மூன்று நாள் சேர்த்துக் கொள்ளலாம். 40 வயதைத் தாண்டினாலே உப்பைக் குறைக்க வேண்டும். அதிக உப்பு சிறுநீரகப்பணிக்கு சிரமம் கொடுக்கும் என்பதால் அதில் கவனம் தேவை. எளிதாக இருக்கிறது, சாப்பிட அருமையாக இருக்கிறது என்று தினமும் தயிர் சாதமும் அதற்கு இணையாக ஊறுகாய் சாப்பிடுவதும் சிறுநீரகக் கோளாறை ஏற்படுத்தலாம்.

சிறுநீரகக் கோளாறு போக்கும் மூக்கிரட்டை!
சிக்கன்:
எந்த அளவு சிறுநீர் வெளியேறுகிறதோ அதைப்பொறுத்து நீர் அருந்துவது நல்லது. புரத உணவுகள் தேவை என்பதற்காக சிக்கனைச் சாப்பிடுவது சரியல்ல. காய்கறிகளில் கிடைக்கும் புரதமே சிறந்தது. பாசிப்பயறில் உள்ள புரதம் சிறுநீரக நோயாளர்களுக்கு நல்லது. பொதுவாக பயறு, பருப்புவகைகள் மற்றும் கோதுமை, கேழ்வரகு, கம்பு, சோளம் போன்ற போன்ற தானியங்கள் உண்பதைத் தவிர்க்க வேண்டும். மாறாக பாரம்பரிய அரிசி ரகங்களை உணவில் சேர்த்துக் கொள்ளலாம். ரவை, சேமியா உணவுகள் உண்ணலாம்.

சிறுநீரகக் கோளாறு போக்கும் மூக்கிரட்டை!
மூக்கிரட்டை:
இவைதவிர மிகச் சாதாரணமாக கிடைக்கும் சில மூலிகைகளை சாப்பிடுவதன்மூலம் சிறுநீர்ப்பாதையில் ஏற்படும் கல்லடைப்பில் தொடங்கி சிறுநீரகச் செயலிழப்பு வரை அனைத்து பிரச்சினைகளிலிருந்தும் நம்மைக் காத்துக்கொள்ளலாம். வயல் வரப்புகளின் ஓரங்களில் களைச்செடியாக வளர்ந்து நிற்கும் நீர்முள்ளிச்செடி, பொங்கல் பண்டிகையின்போது மாடுகளின் கழுத்தில் கட்டி தொங்கவிடும் சிறுகண்பீளை, வறண்ட நிலங்களில் வளர்ந்து கிடக்கும் நெருஞ்சிமுள், பூனைமீசைச் செடி போன்றவற்றை எடுத்து தேநீராக்கி காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் இந்தப் பிரச்சினை அடியோடு விலகிவிடும். கூடவே, மூக்கிரட்டைக் கீரையின் தண்டு மற்றும் இலையை நீரில் போட்டுக் காய்ச்சி வடிசாறாக அருந்தலாம்.

மூக்கிரட்டையின் இலைகளை லேசாக வதக்கி துவையல் செய்து சாப்பிட்டாலும் பிரச்சினை சரியாகும். சிறுநீரகம் செயலிழந்துவிட்டால் டயாலிசிஸ் செய்வதுமட்டுமே தீர்வு என்ற நிலையில் வெறும் மூக்கிரட்டையைச் சாப்பிட்டாலே அதிலிருந்து விடுபடலாம்.மூக்கிரட்டைக்கீரையின் வேர் 10 கிராம் அளவுக்கு எடுத்து அதனுடன் சிறிது பெருஞ்சீரகத்தைச் சேர்த்து 100 மில்லி தண்ணீர் விட்டு கொதிக்க வைக்க வேண்டும். இதை தினமும் குடித்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும். இந்த குடிநீரைக் குடிக்கும்போது வயிற்றுக்கழிச்சல் உண்டாகலாம்.