வாயுப்பிடிப்பால் அவஸ்த்தை படுவோருக்கு அற்புதமான வீட்டு வைத்தியம்

 
stomach

இந்த நவீன யுகத்தில் உணவுப்பழக்கம் மாறி போனதால் பெரும்பாலானோருக்கு வாயு பிரச்சினை உண்டாகிறது .இந்த வாயு கோளாறால் உடலில் பல இடத்தில் வலி ஏற்படுகிறது .மேலும் வயிறு வீக்கம் ,நெஞ்செரிச்சல் ,அல்சர் போன்ற நோய்களால் அவதி பட்டு பிடித்த உணவுகளை சாப்பிட முடியாமல் அவதி பட்டு வருகின்றனர்

இந்த பாஸ்ட் புட் உலகில் ,நிறைய பேர் இரவு நேரம் முதல் நள்ளிரவில் கூட அதீத கொழுப்பு உணவுகள் , மாவு, வெற்று கலோரிகள் நிறைந்த உணவைச் சாப்பிடும்போது செரிமானம் தாமதமாவதுடன் செரிமான வாயுவின் அளவும் அதிகரிக்கும். இதனால் குடல் வீக்கம் ஏற்படும். இதனால் வயிற்று வலி, ஏப்பம், வாயுத் தொல்லை ஏற்படலாம். சில நேரங்களில் குடல் வீக்கத்தை அடுத்து இந்த வாயு அடிமுதுகில் தசைப்பிடிப்பை உண்டாக்கும். குறிப்பாக உடற்பருமனானவர்களுக்கு இந்த பிரச்னை அதிகரிக்கும். போது அவர்கள் வலியால் உட்கார முடியாமல் அவதி பட்டு வருவார்கள்

stomach

சிலர் இந்த பிரச்னையில் இருந்து தப்பிக்க கார்பனேட்டட் பானங்களை அருந்துவார்கள் .அப்படிப்பட்ட பானங்களை அந்த நேரத்தில் குடிப்பது  தவறு. இதற்கு பதிலாக நாம் தினம் சாப்பிடும் சாப்பாட்டில் இஞ்சி, பூண்டு உள்ளிட்டவற்றைச் சேர்த்துக்கொள்ளலாம். மேலும் கீரை வகைகள், பழங்கள் உள்ளிட்டவை வாயுத் தொல்லையைப் போக்குவதோடு பல ஆரோக்கிய நன்மைகளை உடலுக்கு அளிக்கிறது .மேலும்  லெமன் டீ, கிரீன் டீ உள்ளிட்ட டீடாக்ஸ் பானங்களை அருந்தி தொல்லையில்லாமல் ,வயிறு பிரச்சினையில்லாமல் நிம்மதியாக வாழலாம் .