பச்சை பூண்டை வெறும் வயித்துல சாப்பிட்டா .இவ்ளோ நன்மை இருக்கா ?நம்பவே முடியல ..

 
health

உங்க நாளை சில பூண்டு பற்களுடன் தொடங்குவது நல்லது என்கிறார்கள் ஊட்டச்சத்து நிபுணர்கள். பூண்டு உங்க ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் மேம்படுத்த உதவுகிறது. தினமும் காலையில் ஒரு கிளாஸ் தண்ணீருடன் பூண்டு பற்களை சாப்பிடுவது உங்க ஒட்டுமொத்த நல்வாழ்வுக்கும் உதவி செய்யும்.
​பூண்டு

சமையலைப் பொருத்தவரை பூண்டு மிக முக்கியமான பொருளாகும். பூண்டில் அழற்சி எதிர்ப்பு பண்புகள், ஆன்டி மைக்ரோபியல் பண்புகள், பூஞ்சை எதிர்ப்பு பண்புகள் போன்ற பண்புகள் காணப்படுகிறது. கொலஸ்ட்ராலை கரைப்பதில் பூண்டு மிகச் சிறந்த பங்காற்றுகிறது. இந்த பூண்டு பற்களை காலையில் வெறும் வயிற்றில் சாப்பிடும் போது நல்ல சீரண சக்தியை நீங்கள் பெற முடியும். டயாபெட்டீஸ் நோயாளிகளுக்கு  தங்கள் இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்தும் 

Health Benefits of Garlic

பூண்டில் உள்ள ஆன்டி ஆக்சிடன்டுகள், விட்டமின் சி, பி6 மற்றும் கனிமங்கள், உடலின் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கின்றன.

குறிப்பாக பூண்டை வெறும் வயிற்றில் சாப்பிட்டால், உடல் எடை குறையும். அதுமட்டுமின்றி, ஆண்கள் பூண்டு சாப்பிடுவது பாலியல் ஆரோக்கியத்திற்கு நல்லது.

ஆய்வுகளில் பூண்டை பச்சையாக வெறும் வயிற்றில் சாப்பிட்டால், அது சக்தி வாய்ந்த ஆன்டி-பயாடிக்காக(antibiotic) செயல்படுவதாக தெரிய வந்துள்ளது.

மேலும், இரத்த அழுத்தத்திற்கான அறிகுறிகளில் இருந்து நிவாரணம் தருவதாக ஆய்வுகளில் கண்டறியப்பட்டுள்ளது.

பச்சை பூண்டை சாப்பிட்டால், கல்லீரல் மற்றும் சிறுநீர்ப்பை சரியாக செயல்படும் மற்றும் வயிற்று பிரச்சனைகளும் நீங்கும். குறிப்பாக அஜீரணம் மற்றும் பசியின்மை போன்றவை நீங்கும்.

பச்சை பூண்டு மன அழுத்தத்தையும் கட்டுப்படுத்த உதவும். எனவே அலுவலகத்தில் அதிக வேலைப்பளு இருப்பவர்கள், தினமும் பச்சை பூண்டை வெறும் வயிற்றில் சாப்பிட்டு வருவது நல்லது.

பச்சை பூண்டை வெறும் வயிற்றில் சாப்பிட்டால், இரத்த அழுத்தம் அதிகரிப்பது குறைந்து, இதய நோய் வருவது தடுக்கப்படும்.

வயிற்றில் புழுக்கள் இருந்தால், அதனை வெளியேற்ற, தினமும் ஒரு பச்சை பூண்டை வெறும் வயிற்றில் காலையில் சாப்பிட்டு வந்தால், உடலில் உள்ள நச்சுக்கள் அனைத்தும் வெளியேறி, புழுக்களும் வெளியேறிவிடும்.

பூண்டை பச்சையாக சாப்பிடுவதால் சிலருக்கு அலர்ஜியை ஏற்படுத்தும். அதுவும் உடலில் கொப்புளங்கள் வருவது, உடலின் வெப்பநிலை அதிகரிப்பது, தலை வலி ஏற்படுவது போன்றவை இருந்தால், உடனே பூண்டை பச்சையாக சாப்பிடுவதை தவிர்த்திடுங்கள்.

ஒரு நாளைக்கு 1-2 பல் பூண்டு சாப்பிடுவது நல்லது.