இந்த பழங்களை தினமும் உண்பதால் தலைமுடி உதிர்வதை தடுக்கலாம்
பொதுவாக நம் தலைமுடி நம் அழகில் முக்கிய பங்கு வகிக்கிறது .அதனால் பல பெண்களும் ஆண்களும் தலை முடி பராமரிப்புக்கு அதிகம் செலவு செய்கின்றனர் .அதிலும் பெண்கள் தலை முடிக்கு என்று பியூட்டி பார்லர் சென்று அதிகம் முடி பராமரிப்பை மேற்கொண்டு வருகின்றனர் .எனவே இந்த பதிவில் முடி பராமரிப்புக்கு எந்த விட்டமின் உதவும் என்று பார்க்கலாம்
1.தலை முடி அடர்த்தியாக வளர பல்வேறு விட்டமின்களோடு விட்டமின் A பெரிதும் உதவுகிறது.
2.விட்டமின் A பப்பாசி, கரட், அத்திப்பழம் போன்ற பழங்களில் காணப்படுகின்றது.
3.இந்த பழங்களை தினமும் உண்பதால் தலைமுடி உதிர்வதை தடுத்து வளர்வதை அதிகரிக்கலாம்.
4.அது மட்டுமல்லாமல் தலைமுடி வளர்ச்சிக்கு விட்டமின் B5 சத்து அவசியம்.
5.இது முட்டை, காளான், காலிபிளவர், சர்க்கரை வள்ளி போன்றவற்றில் அதிகளவு நிறைந்துள்ளது.
6.இந்த உணவுகளையும் அடிக்கடி உண்பது முடி வளர்ச்சியை அதிகரிக்கும்.
7.அது மட்டுமல்லாமல் விட்டமின் C ஊட்டச் சத்தானது முடி வளர்ச்சியை அதிகரிப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது.
8.விட்டமின் C எலுமிச்சை, கொய்யா, நெல்லிக்காய், ஸ்ட்றாபரி, தோடம்பழம், முலாம்பழம் போன்ற பழங்களில் அதிகளவு நிறைந்துள்ளது.
9.எனவே இந்த பழங்களை தினமும் உண்டு வந்தால் உடலுக்கு ஆரோக்கியம் மற்றும் முடி உதிர்வு தடுக்கப்பட்டு முடி அடர்த்தியாக வளர வழிவகுக்கும்.
10.அது மட்டுமல்லாமல் விட்டமின் E தலைமுடியின் ஆரோக்கியத்திற்கு பெரிதும் உதவுகிறது.
11.இந்த விட்டமின் E ஊட்டச்சத்தானது அவகாடோ, பாதாம், Wheat germ oil, சூரியகாந்தி விதைகள் போன்றவற்றில் அதிகளவு காணப்படுகிறது

