நீரிழிவு நோயாளிகள் அவ்வப்போது இந்த பழம் சாப்பிடுவது நல்லது

 
health tips of koyya health tips of koyya

பொதுவாக கொய்யா பழத்தில் நம் உடலுக்கு தேவையான பல நன்மைகள் அடங்கியுள்ளது .உதாரணமாக 
தினந்தோறும் காலை அல்லது மதியத்தில் ஒரு கொய்யா பழம் சாப்பிடுவது மலச்சிக்கல் பிரச்னையை விரைவில் தீர்க்கும். மேலும் அல்சர், குடல்களில் ஏற்படும் புண்களையும் ஆற்றும் தன்மை கொண்டது கொய்யா பழம்.இந்த பதிவில் கொய்யா பழம் மூலம் நம் உடல் அடையும் மருத்துவ பலன்களை பாக்கலாம் 

1.கொய்யா பழத்தில் “வைட்டமின் சி” சத்து அதிகம் இருக்கிறது. 
2.இந்த வைட்டமின் சி சக்தி நமது உடலில் சரியான அளவில் இருந்தால் மட்டுமே நமது உடலின் நோய் எதிர்ப்பு திறன் வலுவுடன் இருந்து, உடலை வெளியிலிருந்து தாக்க வரும் நோய் நுண்கிருமிகளை எதிர்த்து போராட முடிகிறது.
3.கொய்யா பழத்தில் “லைக்கோபீனே, க்வெர்செடின்” போன்ற வேதி பொருட்கள் அதிகம் நிறைந்திருக்கின்றன. 
4.இந்த கொய்யாவின் வேதி பொருட்கள்  உடலில் புற்று நோய் செல்கள் மீண்டும், மீண்டும் வளருவதை தடுப்பதில் பேருதவி புரிகிறது. 
5.புற்று பாதிப்பு கொண்டவர்களும், புற்று நோய் ஏற்படாமல் இருக்க நினைப்பவர்களும் கொய்யா பழங்களை அதிகம் சாப்பிட வேண்டும்.
6.கொய்யா பழத்தில் “மெக்னீசியம்” தாது அதிகம் நிறைந்துள்ளது. இது உடலில் நரம்புகள் மற்றும் தசைகளுக்கு ஓய்வளிக்கும் ஆற்றலை கொண்டது.
7.கொய்யா பழத்தில் நார்ச்சத்து அதிகம் நிறைந்திருக்கிறது. மேலும் இது மிக குறைந்தளவு “கிளைசீமிக்” குறியீட்டு அளவு கொண்ட ஒரு பழமாகும்.
8. இந்த கிளைசீமிக் குறியீட்டு அளவு மிக குறைந்த அளவில் இருப்பதால் நீரிழிவு நோயாளிகள் இதை சாப்பிட்டுட்டு வரும் போது அவர்களின் ரத்தத்தில் சர்க்கரையின் அளவு திடீரென்று அதிகரிப்பதை தடுக்கிறது. நீரிழவு நோயாளிகள் அவ்வப்போது கொய்யா பலம் சாப்பிடுவது நல்லது.
9.இந்த ஆரோக்கியம் தரும் கொய்யா பழம் மூளையின் செல்களையும் புத்துணர்ச்சி அடையச் செய்யும் தன்மையும் கொண்டது. 
10.சிலருக்கு மன அழுத்தம் உண்டாகும் .அப்போது கொய்யா பழங்களை அடிக்கடி சாப்பிடுவதால் மன அழுத்தம் ஏற்படாதவாறு தடுக்கலாம்.

Advertisement