இதய நோய்கள் வராமல் தடுக்கும் இந்த பழம்

 
heart

பொதுவாக தர்பூசணி பழத்தில் நம் உடலுக்கு தேவையான ஆரோக்கிய நன்மைகள் நிறைய அடங்கியுள்ளது .

உதாரணமாக தர்பூசணி பழம் உடலிற்கு தேவையான இன்சுலினை மேம்படுத்தும். கட்டி, ஆஸ்துமா, பெருந்தமனி வீக்கம், நீரிழிவு, பெருங்குடல் புற்று நோய் மற்றும் கீல் வாதம் போன்றவற்றை தர்பூசணி மூலம் குணப்படுத்த முடியும்.மேலும் தர்பூசணி பழத்தில் அடங்கியுள்ள ஆரோக்கிய நன்மைகள் பற்றி நாம் இந்த பதிவில் காணலாம்

1.தர்பூசணி பழத்தில் வைட்டமின் சத்துகள் நிறைந்திருக்கிறது. இந்த வைட்டமின் உடலின் நலத்திற்கும், குறிப்பாக கண்பார்வையின் நலத்திற்கு மிகவும் அவசியமாகும்.

tharpoosani

2.தர்பூசணியில் ஏராளமான மருத்துவக்குணங்கள் உள்ளன என்பது பலர் அறியாத விஷயம்.

3.தர்பூசணி பழங்களை அதிகம் சாப்பிடுவதால் சிறுநீரகங்கள் சிறப்பாக செயலாற்றுவதோடு, சிறுநீர் பைகளில் மூத்திர அடைப்பு, நீர் சுருக்கு போன்ற நோய்கள் ஏற்படுவதை தடுக்கும்.

4.தர்பூசணி பழங்களில் நார்ச்சத்து அதிகம் உள்ளது. இதை சாப்பிடும் நபர்களுக்கு ரத்த அழுத்தம் வெகுவாக குறைந்து, இதயம் சம்பந்தமான நோய்கள், பாதிப்புகள் ஏற்படாமல் தடுக்கிறது.

5.தர்பூசணியில் பசலைக்கீரைக்குச் சமமான அளவு இரும்புச் சத்து அதிகம் உள்ளது.

6.தர்பூசணி பழத்தில் வைட்டமின் சி, , பி 6, பி1 உள்ளன. பொட்டாசியம், மெக்னீசியம் போன்ற தாது உப்புகளும் காணப்படுகின்றன.

7. 100 கிராம் தர்பூசணியில் 90 சதவீதம் தண்ணீர் மற்றும் 46 கலோரி, கார்போஹைட்ரேட் 7 சதவீதம் உள்ளது.

8.தர்பூசணியை சாப்பிட்ட பிறகு ஏற்படும் வேதியியல் மாற்றம் காரணமாக சிட்ரூலின் அர்ஜினைன் என்ற வேதிப்பொருளாக மாற்றப்படுகிறது.

9.அது இதயத்தையும், ரத்த ஓட்டம் சம்பந்தமான உடல் உறுப்புகளையும் ஊக்குவிக்கிறது என்று ஆய்வில் தெரியவந்துள்ளது.

10.தர்பூசணி பழம் தமனி, ரத்த ஓட்டம், இதய ஆரோக்கியத்தை காக்கும் அமினோ அமிலங்கள் போன்றவற்றை சீராக இயக்கக் கூடியது.