எலும்புக்கும்,தோலுக்கும் நன்மை செய்யும் சில வகை பழங்கள்

 
bone bone

பொதுவாக நாம் நீண்ட நாள் ஆரோக்கியமாய் நடமாடவும் ,குனிந்து நிமிர்ந்து எல்லா வேலைகளையும் செய்யவும் எலும்புகள் ஆரோக்கியமாய் இருக்க வேண்டும் .இந்த எலும்பு ஆரோக்கியத்துக்கு உதவும் பழங்களை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம் 

1.சிலருக்கு எலும்பு புறை ஏற்படும் .எலும்புக்கு பலம் அளிக்கக்கூடிய சில பழங்களை சாப்பிட்டால், எலும்புப் புரை ஏற்படாமல் காத்துக்கொள்ளலாம். 
2.நாம்  அன்னாசி பழம் அதிகம் சாப்பிடலாம். அன்னாசிப் பழத்தில் பொட்டாசியம் சத்து அதிகம் உள்ளது. 
3.இந்த பொட்டாசியம் நம் உடலிலுள்ள அமில தன்மையை சமன்செய்து ஆரோக்கியம் தரும் . 
4.அன்னாசியில் உள்ள பொட்டாசியம்  காரணமாக கால்சியம் இழப்பு தவிர்க்கப்படுகிறது. 
5.மேலும் அன்னாசியில் உள்ள வைட்டமின் ஏ மற்றும் கால்சியம் ஆகிய சத்துக்கள்  எலும்பை உறுதியாக்கக்கூடியவை. 
6.ஆகவே, அன்னாசிப் பழம் சாப்பிடலாம் ,அதை சாப்பிடுவது எலும்பை ஆரோக்கியமாக காத்துக்கொள்ளும். 
7. எல்லாக்காலத்திலும்  நமக்கு இதமளிக்கக்கூடிய பழங்களுள் பப்பாளியும் ஒன்று.
8. இந்த பப்பாளி பழத்தில் வைட்டமின் சி சத்து ஏராளமாய்  உள்ளது. 
9.இந்த பப்பாளி பழம்  எலும்புக்கும். தோலுக்கும் நன்மை செய்வதோடு, நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கிறது.  
10.அடுத்து தக்காளி பற்றி பார்க்கலாம் .எலும்பில் ஏற்படும் குறைகளை சரிசெய்யும் தன்மை தக்காளிக்கு உள்ளது. 
11.இந்த தக்காளி  எலும்பின் நிறையை அதிகரிக்க செய்கிறது. 
12.தக்காளியில் உள்ள வைட்டமின் கே, கால்சியம் மற்றும் லைகோபீன் ,எலும்புக்கு பலம் அளிக்கின்றன..