நீரிழிவு நோயாளிகளுக்கு ஏற்ற பழம் எது தெரியுமா ?

 
sugar

பொதுவாக பழ வகைகள் நம் ஆரோக்கியத்துக்கு மிகவும் முக்கியம் ,நமக்கு எப்போதெல்லாம் நேரம் கிடைக்கிறதோ அப்போதெல்லாம் எண்ணெய் பலகாரங்கள் மற்றும் இனிப்பு வகைகளை உண்ணாமல் பழ வகைகளை உண்ணலாம் .இந்த பதிவில் கொய்யா பழம் மூலம் நம் உடலுக்கு கிடைக்கும் ஆரோக்கியம் பற்றி பார்க்கலாம் 

1.கொய்யாப்பழத்தின் நோய் எதிர்ப்பு சக்தி உள்ளது .இந்த  நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் தன்மைக்கு, அதில் உள்ள வைட்டமின் சி காரணம். 
2.கொய்யாபழத்தில் உள்ள வைட்டமின் சி  மூலம் சுவாச ஒவ்வாமைகளைக் கட்டுப்படுத்த உதவுகிறது.
3.நம்  மூளை ஆரோக்கியத்தை பராமரிக்க தேவையான அனைத்து வைட்டமின்களும் கொய்யாவில் காணப்படுகின்றன. 
4. மேலும் கொய்யா பழம் மூளைக்கு இரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது மற்றும் உங்கள் நரம்புகளை தளர்த்தும். 
5.மேலும் கொய்யாவில் லைகோபீன் போன்ற ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் உள்ளன, இது நமது உயிரணுக்களுக்கு ஏற்படும் சேதத்தைத் தடுத்து நம்மை ஆரோக்கியமாய் வைக்கிறது . 
6.கொய்யா நீரிழிவு நோயாளிகளுக்கு ஏற்ற பழம் . காரணம் , இது நார்ச்சத்து நிறைந்தது, 
7.அது மட்டுமல்லாமல்  இது மிகக் குறைந்த கிளைசெமிக் குறியீட்டைக் கொண்டுள்ளது. இரத்தத்தில் குளுக்கோஸ் அளவைக் கட்டுப்படுத்துகிறது 
8.கொய்யாப்பழத்தில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் சருமத்தை சுருக்கங்கள் ஏற்படாமல் பாதுகாக்கிறது, 
9.நாம் தினமும் ஒரு கொய்யாப்பழம் சாப்பிடுவது முதுமையை ஒத்தி வைக்கும். 
10.உணவில் நார்ச்சத்து இல்லாததால் மலச்சிக்கல் ஏற்படுகிறது. 
11.நார்ச்சத்து அதிகம் உள்ள பழங்களில் கொய்யாவும் ஒன்று.எனவே இது மல சிக்கலை தடுக்கும்