கண்பார்வை மங்குதல், மாலை கண் நோய் போன்றவற்றை குணமாக்கும் இப்பழம்

 
eye eye

பொதுவாக பழங்களை நாம் சாப்பிடுவது நம் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் .அந்த வகையில் செர்ரி பழத்தில் பல்வேறு மருத்துவ குணம் அடங்கியுள்ளது ,எனவே நாம் இந்த பதிவில் செர்ரி பழம் தொடர்ந்து சாப்பிடுவதால் நமக்கு கிடைக்கும் பலன்கள் பற்றி நாம் பார்க்கலாம் 

1.பொதுவாக செர்ரி பழத்தில் வைட்டமின் “ஈ” சக்தி நிறைந்திருக்கிறது. இந்த வைட்டமின் உடலின் நலத்திற்கும், குறிப்பாக கண்பார்வையின் நலத்திற்கு மிகவும் அவசியமாகும்.
2.செர்ரி பழம் மூலம் கண்பார்வை மங்குதல், மாலை கண் நோய் போன்றவை ஏற்படுவதை தடுத்து, கண்பார்வை திறனை பிரகாசிக்க செய்கிறது.
3.செர்ரி பழத்தில் உணவை செரிமானம் செய்ய கூடிய சத்துகள் அதிகம் உள்ளன. 
4.மலசிக்கல் உள்ளோர் இப்பழங்களை அதிகம் சாப்பிட்டால்  நீண்ட நாட்களாக இருக்கும் மலச்சிக்கல் பிரச்சனைகள் நீங்கும். 
5.சிலருக்கு குடல் பிரச்சினை இருக்கும் .இந்த குடல்களில் ஏற்படும் நோய்களை போக்கி, குடல்களின் நலன் மற்றும் சீரான இயக்கத்திற்கும் செர்ரி பழம் பேருதவி புரிகிறது.
6.. தலை முடி உதிர்வோர்  செர்ரி பழங்கள் சாப்பிட்டால்  அதிலிருக்கும் வைட்டமின் “எ” மற்றும் “ஈ” சத்துக்கள் தலைமுடி உதிர்வதை தடுக்கிறது. 
7.மேலும் இளநரை, பொடுகு போன்ற பிரச்சனைகளை விரைவில் தீர்ப்பதில் செர்ரி பழம் மிகுந்த ஆற்றல் வாய்ந்த ஒரு இயற்கை உணவாக இருக்கிறது.
8.அது மட்டுமல்லாமல் செர்ரி பழம் இயற்கையிலேயே ரத்த ஓட்டத்தை தூண்டும் ஒரு பழம் ஆகும். 
9.. இதயத்திற்கு சீரான ரத்த ஓட்டம் கிடைக்க ரத்த குழாய்களில் ரத்தம் உறைந்து விடாமல் இருக்க செர்ரி பழங்கள் அதிகம் சாப்பிட்டு வருவது சிறந்த வழிமுறையாகும்.
10.உடல் எடை குறைக்க நினைப்போருக்கு ,செர்ரி பழத்தில் இருக்கும் சத்துகள் உடலின் அதீத பசியுணர்வை கட்டுப்படுத்தி, உடல் எடையை குறைப்பதில் பேருதவி புரிகிறது.