கொலஸ்ட்ராலை கொல்லும் உணவு வகைகள்

 
orange

பொதுவாக நம் இதயத்துக்கு முதல் எதிரி எதுவென்றால் அதுக்கெட்ட கொழுப்புள்ள உணவு வகைகள்தான் இந்த உணவு வகைகளை நாம் ஒதுக்கி வந்தால் நம் இதயம் பாதுகாப்பாய் இருக்கும் இந்த கெட்ட கொழுப்பை கரைக்கும் உணவுகள் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்

1.அதிக கொலஸ்ட்ரால் பிரச்சனை உள்ளவர்கள் எலுமிச்சை மற்றும் ஆரஞ்சு பழங்களை சாப்பிட்டு வருவது மிகவும் நல்லது.

lemon

2.எலுமிச்சை மற்றும் ஆரஞ்சு பழங்களில்  அதிகளவு நார்ச்சத்துக்கள் நிறைந்திருக்கின்றன.

3.கெட்ட கொழுப்பை கரைப்பதில் எலுமிச்சை சிறந்து விளங்குகின்றது.

4.இரத்த நாளங்களில் உள்ள கெட்ட கொழுப்பை கரைப்பதில் மீன்கள் முக்கியமானவை.

5.இருதயம் சம்பந்தமான பிரச்சனை உள்ளவர்கள் உணவுகளில் மீன்கள் இருக்கும் படி பார்த்துக்கொள்ளுவது மிகவும் நல்லது.

6. வைட்டமின்கள் நிறைந்துள்ள பழம் அவகோடா. இது உடலில் நல்ல கொழுப்பை அதிகரித்து கெட்ட கொழுப்பினை கரைக்க முக்கிய பங்கு வகிக்கிறது.

7.பூண்டு   கொலஸ்ட்ராலை வேகமாக குறைப்பதுடன் நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கின்றது.

8.சின்ன வெங்காயம்  இரத்த குழாயில் உள்ள கெட்ட கொழுப்புகளை கரைப்பதில்  முக்கிய பங்கு வகிக்கிறது.

9.தினமும் ஒரு கரண்டி தேன் சாப்பிட்டு வருவதன் மூலம் உடலில் கெட்ட கொழுப்புக்கள் சேர்வதை தடுக்க முடியும்.

10.ஒலிவ் ஆயிலில் கொலஸ்ட்ராலை கரைக்கும் சத்துக்கள் நிறைந்திருக்கின்றன. இருதயத்திற்கும் சிறந்த நன்மை தருகின்றது ..

11.தினமும் உணவுகளில் பீன்ஸ் சேர்த்து சாப்பிட்டு வந்தால் உடலில் உள்ள கெட்ட கொழுப்புக்கள் குறைவதுடன் உடல் எடையை குறைக்கவும் உதவியாக இருக்கும்.