இந்த உணவுகளை ஒதுக்கினா ,உங்களை சுகர் பேஷண்ட்டுன்னு ஒதுக்க மாட்டாங்க

 
tulsi

 

அதிக உடற்பருமன் ஏற்படுவது நமக்கு சர்க்கரை நோய் வருவதற்கான வாய்ப்பை உருவாக்கும் என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர் .மேலும் இந்த நோய் பரம்பரையாகவும் உண்டாக வாய்ப்புள்ளது .சிலருக்கு 30 வயதில் கூட இதன் அறிகுறிகள் வெளிப்படும் ,சிலருக்கு 50 வயதில் கூட இந்த நோய் வெளிப்படும் .ஆனால் அடிக்கடி யுரின் போவது ,சோர்வு ,அதிக தாகம் ,பசி போன்றவை இதன் ஆரம்ப அறிகுறிகள் .இந்த நோய் வந்து விட்டால் சில கட்டுப்பாடுகளை பின்பற்றினால் இது முற்றாமலும் ,இதன் பாதிப்புகளான கண் பார்வை ,கிட்னி பாதிப்பு ,இதய நோய் போன்றவற்றிலிருந்து தப்பிக்கலாம் .மேலும் சிலர் நேரம் தவறி மாத்திரை மற்றும் உணவு எடுப்பது ,மனஅழுத்தம் ,தூக்கமின்மை போன்ற தவறான செயலால் இந்த நோய் முற்ற வாய்ப்புள்ளதாக மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்

sugar

1.சர்க்கரை நோயாளிகள்  ஆரோக்கியமாக வாழ மண்ணுக்கடியில் விளையாத காய்கறிகள் அதிகமாகச் சேர்த்துக் கொள்ள வேண்டும். .

2.சுகர் பேஷண்டுகள் ஆரோக்கியமாக வாழ மன அமைதி மிகவும் முக்கியம் என்பதோடு, கண்டிப்பாக 7 மணி நேரம் தூங்க வேண்டும்.

3.சுகர் பேஷண்டுகள் ஆரோக்கியமாக வாழ ,முக்கியமாக மா, பலா, வாழை ஆகிய முக்கனிகளை தொடாமல் இருப்பது நல்லது. இவை உடலுக்கு இனிப்பு சக்தியைக் கொடுக்கும் என்பதை மறவாதீர்கள்.

4.சுகர் பேஷண்டுகள் ஆரோக்கியமாக வாழ துளசி இலைகள் உதவும் .இது நீரிழிவு நோயாளிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக கருதப்படுகிறது.

5.சுகர் பேஷண்டுகள் துளசி அதிகமாக உண்ணலாம் .துளசி  இலைகளில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உள்ளன, அவை உடலுக்கு நல்லது.