நம் உடலில் சர்க்கரை மற்றும் கொழுப்பு வராமல் காக்கும் உணவுகள் .

 
cholestral

1.ஏராளமான மருத்துவக் குணங்கள் நிறைந்த சிறுதானியங்களின் ஒன்றான வரகு, சர்க்கரை நோய்க்கும் உடல்பருமனானவருக்கும் சிறந்தது, தானியங்கள். குறிப்பாக வரகு இது சிறுதானியம் வகையைச் சேர்ந்தது. ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்தும் ஆற்றல் கொண்டது இது

2.தினையில் வைட்டமின் பி1 சத்து இருப்பதால் தசைகள், நரம்புகள் சீராக இயங்கும். வைட்டமின் பி1 குறைப்பாட்டால் ஏற்படுகின்ற இதய  பிரச்னைகூட நீங்கும். தினை உணவுகளைத் தொடர்ந்து சாப்பிடுவோருக்கு மறதி நோய் வராது. இதில், ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தும் தன்மை உள்ளதால் ஸுகர் எந்த ஜென்மத்திலும் வராது

sugar

3..அடுத்து கம்பு சிறுதானியம் அதிக நார்ச்சத்துக்கள் கொண்டவை. ஆதலால், செரிமானம் மெதுவாக நடக்கும். இதனால் குளுக்கோஸ் மெதுவாக வெளியேறி ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிக்காமல் தடுத்து நம் ஆரோக்கியத்தை காக்கும்

4.ஒரு நாளைக்குத் தேவையான நார்ச்சத்துக்கான அளவில் 48% சோளத்தில் உள்ளது. இதனால் செரிமான மண்டலம் முழுவதும் சிறப்பாகச் செயல்படும். இதை வயிற்றுக்கு நல்லது செய்யும் சிறுதானியம் எனச் சொல்லலாம். இதன் மூலம் சர்க்கரையின் அளவு கட்டுக்குள் வரும்.

5. தினமும் ஒரு கைப்படி பாதமை இரவில் ஊற வைத்து காலையில் சாப்பிடுவது மிகவும் நல்லது. அஜீரணக் கோளாறைப் போக்கி உணவை நன்கு செரிமானம் அடையச் செய்கிறது.

6.அத்திப்பழம் சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் நல்லது. அத்திப்பழத்தில் உள்ள நார்ச்சத்துக்கள் செரிமான மண்டலத்தை மேம்படுத்துவதோடு, மலச்சிக்கல் பிரச்சனைகள் வராமல் தடுக்கிறது.

7.கேரட் மற்றும் பீட்ரூட்டை வாரத்தில் 2 முறை இவற்றை  உணவாகவோ ஜூஸாவோ சாப்பிடுவது மிகவும் நல்லது.  இது ரத்த உற்பத்தி அதிகரிக்கவும் மற்றும் செரிமான கோளாறுகளை தடுக்கவும் உதவுகிறது.