கிட்னி முதல் கல்லீரல் வரை கண்டமாகாமலிருக்க இந்த உணவை கண்டதும் ஓடுங்க

 
liver

குளிக்க நேரமில்லை; பேச நேரமில்லை; சாமி கும்பிட நேரமில்லை; சமைப்பதற்கு மட்டும் நேரமிருக்குமா என்ன? - இன்றைய தலைமுறையினர் நம்பியிருப்பது 'பாஸ்ட் ஃபுட்' என்று அழைக்கப்படும் துரித உணவகங்களைதான். துரித உணவு பொருள்களின் மணம், ருசி ஆகியவற்றுக்கு அடிமையாகிப் போனீர்கள் என்றால் அவ்வளவுதான்!  பீட்ஸா, பர்கர், நூடுல்ஸ், ஃப்ரைடு ரைஸ், செயற்கை குளிர்பானங்கள், ஐஸ்கிரீம் வகைகள் போன்ற 'துரித உணவு' வகைகளை உணவென்றே அழைக்கக்கூடாது. ஏனெனில் உணவில் இருக்கக்கூடிய எந்த ஊட்டச் சத்தும் இவற்றில் இல்லை. கலோரி என்னும் ஆற்றல், கொழுப்பு மற்றும் சர்க்கரை ஆகியவை பெருமளவு காணப்படுவதால் இவை உடல் நலத்திற்கு தீங்கு மட்டுமே செய்யும். 

பல்வேறு காரணங்களால் புற்றுநோய் செல்கள் உடலில் வளர்கின்றன. வாழ்க்கை முறை மாற்றங்களைச் செய்வதன் மூலம் அதைத் தடுக்கலாம். நமது உணவுப் பழக்கம் புற்றுநோய் அபாயத்தை அதிகரிக்கவோ அல்லது குறைக்கவோ முடியும் என்பதற்கான ஆதாரங்கள் அதிகரித்து வருகின்றன.

கோழி, மீன் மற்றும் முட்டை அனைத்தும் ஆரோக்கியமானவை. இறைச்சியை பதப்படுத்துவது புற்றுநோயை ஏற்படுத்தும். எனவே பதப்படுத்தப்பட்ட இறைச்சிக்கு பதிலாக, வீட்டில் இறைச்சியை சமைக்கவும்

kidney

வறுத்த உணவுகளை அதிகமாக உட்கொள்வது உடலில் புற்றுநோய் செல்கள் வளர்ச்சிக்கு வழிவகுக்கும். உருளைக்கிழங்கு அல்லது இறைச்சி போன்ற உணவுகளை அதிக வெப்பத்தில் வறுக்கும்போது, அக்ரிலாமைடு என்ற கலவை உருவாகிறது. இந்த கலவை புற்றுநோய் பண்புகளைக் கொண்டுள்ளது. மேலும் இது டிஎன்ஏவை சேதப்படுத்தும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

வறுத்த உணவுகள் உடலில் ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தையும், புற்றுநோய் உயிரணுக்களின் வளர்ச்சியுடன் தொடர்புடைய வீக்கத்தையும் அதிகரிக்கும்.

அதிக பதப்படுத்தப்பட்ட சர்க்கரை மற்றும் கார்போஹைட்ரேட்டுகள் உடலில் ஆக்ஸிஜனேற்ற அழுத்தம் மற்றும் அழற்சியின் அபாயத்தை அதிகரிக்கும், இது பல்வேறு வகையான புற்றுநோய்களுக்கு வழிவகுக்கும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. எனவே சர்க்கரைக்கு பதிலாக வெல்லம் அல்லது தேன் பயன்படுத்த முயற்சி எடுங்கள்.

ஆல்கஹால் அதிகமாக உட்கொள்வது உடலில் ஃப்ரீ ரேடிக்கல்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும். மேலும் இது வீக்கத்தை ஏற்படுத்தும். ஆல்கஹால் உங்கள் நோயெதிர்ப்பு மண்டலத்தை தாக்கும்.

சிறுநீரக ஆரோக்கியத்தை மேம்படுத்த அல்லது இந்த உறுப்புகளுக்கு சேதம் உண்டாவதை தடுக்க தவிர்க்க வேண்டிய உணவுகள் உள்ளன.

பாஸ்பரஸ் நிறைந்த உணவுகள்

அதிகப்படியான பாஸ்பரஸ் நிறைந்த உணவுகள் சிறுநீரகங்களில் அழுத்தத்தை ஏற்படுத்தும். அதிக பாஸ்பரஸ் உட்கொள்ளல் மற்றும் சிறுநீரகங்களுக்கு நீண்டகால சேதம் ஏற்படும் அபாயம் இரண்டுக்கும் இடையில் தொடர்பு இருப்பதாக ஆராய்ச்சி காட்டுகிறது.

சிவப்பு இறைச்சி

சிவப்பு இறைச்சியை குறைவாக உண்பவர்களை விட சிவப்பு இறைச்சியை அதிகம் சாப்பிடுபவர்களுக்கு இறுதி நிலை சிறுநீரக நோய் வருவதற்கான வாய்ப்பு உள்ளதாக ஆராய்ச்சி காட்டுகிறது

பேக் செய்யப்பட்ட உணவுகள் தற்போது அதிகரித்து விட்டன. இதில் சேர்க்கப்படும் ரசாயனம் ஹார்மோன் ஏற்றத்தாழ்வு, டிஎன்ஏ மாற்றம் மற்றும் புற்றுநோயை ஏற்படுத்தும்.