மது பிரியர்களே ! குடலை காக்க அவசியம் அடிக்கடி இந்த காயை சேர்த்துக்கோங்க ..

 
liquor

பாகற்காய் என்ற பெயரை கேட்டதும் அதன் கசப்பு சுவைதான் ஞாபகத்துக்கு வரும் ,ஆனால் அதற்குள் அடங்கியுள்ள இனிப்பான மருத்துவ குணங்கள் பற்றி பலருக்கு தெரியாது .அதுவும் பிஸ்ஸா பர்கர் சாப்பிடும் இன்றைய தலை முறையினருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை .இந்த பாகற்காயை உணவில் சேர்த்து கொண்டால் சுவாசக் கோளாறுகள்,கல்லீரலை வலுப்படுத்துதல்,நோயெதிர்ப்புச் சக்தி,பருக்கள்,நீரிழிவு நோய்,மலச்சிக்கல்,சிறுநீரகம் மற்றும் சிறுநீர்ப்பை,இதய நோய் முதல் புற்றுநோய் போன்ற நோய்கள் வராமல் தடுக்க இந்த பாகற்காய் உதவும் .

pagarkai

1.பாகற்காய் வயிறு, குடல்பகுதி மற்றும் நுரையீரல் புற்றுநோய் செல்களை அழிக்கின்றது.

2.பாகற்காய்அடிக்கடி சேர்த்து கொண்டால் உடலில் ஏற்படும் பாக்டீரியா மற்றும் வைரஸ் தொற்றுகளுக்கு எதிராக போராடி நோயெதிர்ப்பு சக்தியை பலப்படுத்துகிறது. 

3.பாகற்காய் உணவில் சேர்த்து கொண்டால் ரத்தத்தை சுத்திகரிப்பது மட்டுமின்றி ரத்த ஓட்டத்திற்கும் வழிவகுக்கிறது. மேலும்,உங்களது சரும பாதுகாப்புக்கும் உதவுகிறது.

4.பாகற்காயை ஜூஸாகவோ இல்லை பொறியலாகவோ சேர்த்து கொண்டால் ,ஆல்கஹாலால் ஏற்பட்ட நச்சுத்தன்மையை இது கல்லீரலுக்கே சென்று சுத்தப்படுத்தி உங்களை ஹேங்ஓவரில் இருந்து காப்பாற்றுகிறது