இன்சுலின் பயன்படுத்துவோருக்கு இம்சை தரும் உணவுகள்

 
sugar

நீரிழிவு நோயால் முற்றிய நிலையில் பாதிக்கப்பட்டவர்கள் இன்சுலின் பயன்படுத்த வேண்டிய அவசியம் பொதுவாகவே உள்ளது. அப்படி கட்டுக்குள் வராத சர்க்கரை நோயாளிகள்   உணவு முறைகளையும் பின்பற்றுவது மிகவும் முக்கியம்.அவர்கள் ஒரு கட்டத்தில் இன்சுலின் இன்ஜெக்ஷனுக்கு சிபாரிசு செய்யப்படுகிறார்கள் .அப்படி இன்சுலின் பயன்படுத்தும் நோயாளிகள் அந்த  நேரத்தில் எந்தெந்த உணவுகள் சாப்பிடக்கூடாது என்று பார்க்கலாம்.

 இன்சுலின் பயன்படுத்தும் சர்க்கரை நோயாளிகள் அதிக கார்போஹைட்ரேட் உள்ள உணவுகளை தவிர்ப்பது சிறந்தது. என்று மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர்

sugar

இன்சுலின் பயன்படுத்தும் சர்க்கரை நோயாளிகள்  சுவையூட்டப்பட்ட செயற்கை சர்க்கரை சேர்த்து சாப்பிடும் தயிரை தவிர்த்து வந்தால் சர்க்கரை அளவு அதிகமாகாமல் இருக்கும்

இன்சுலின் பயன்படுத்தும் சர்க்கரை நோயாளிகள்  ரெடிமேட் ஸ்மூத்திகளை வாங்கும்போது நார்ச்சத்து பழச்சாறுகளை பயன்படுத்த முடியாது. உணவில் நார்ச்சத்து குறைவாக இருந்தால் சர்க்கரை அளவு அதிகமாகும்.அதனால் ஜாக்கிரதையாக பார்த்து வாங்க வேண்டும்

டைப் 2 வகை சுகர் பேஷண்டுகள் ஊட்டச்சத்து குறைவாக உள்ள தானியங்களை சேர்த்துக் கொள்ளக் கூடாது.

டைப் 2 வகை சுகர் பேஷண்டுகள் புரதம் மற்றும் நார்ச்சத்து அதிகம் உள்ள தானியங்களை தான் பயன்படுத்த வேண்டும்.அப்போதுதான் சுகர் அளவு அதிகமாகாமல் இருக்கும்

டைப் 2 வகை சுகர் பேஷண்டுகள் இது மட்டும் இல்லாமல் அரிசி உருளைக்கிழங்கு மைதா ரொட்டி போன்ற உணவுகளை சாப்பிடக்கூடாது அது ரத்த சர்க்கரையை அதிகரித்து விடும் என்பதால் இந்த வகை உணவுகளை தவிர்ப்பது நல்லது