நீங்கள் அறியாமல் சாப்பிடும் இந்த உணவுகளால் உங்கள் கண் தெரியாமல் போகுமாம்

 
eye

உடலில் சர்க்கரை அளவு அதிகரிக்கும் சில உணவுகளால் பார்வை குறைபாடு ஏற்படலாம் ,அந்த உணவுகள்  பற்றியும் அவற்றால் ஏற்படும் பாதிப்பை பற்றியும் இந்த பதிவில் நாம் பார்க்கலாம்

சில ஆரோக்கியமற்ற உணவுகள் பார்வை இழப்பை ஏற்படுத்தலாம் என நிபுணர்கள் கருதுகின்றனர். நிபுணர்களின் கூற்றுப்படி, இது சர்க்கரை மிகுதியாக உள்ள உணவுகள் மற்றும் சுத்திகரிக்கப்பட்ட கார்போஹைட்ரேட்டுகளைக் கொண்ட உணவுகளை அதிக அளவில் உட்கொள்வதால் தூண்டப்படுகிறது எனக் குறிப்பிடுகின்றனர்.

Digital Eye Strain

ரொட்டி, பாஸ்தா, கெட்ச்அப் மற்றும் ஃபிஸி பானங்கள் ஆகியவை பார்வை இழப்புடன் தொடர்புடைய முக்கிய உணவுகளாக இருப்பதாக  சுகாதார நிபுணர்கள் குறிப்பிடுகின்றனர். இவை இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை அதிகரிக்கும் ..

கண்களைச் சேதப்படுத்தும் பிற உணவுகளாக, பன்றி இறைச்சி, பதப்படுத்தப்பட்ட இறைச்சி, உப்பு, காஃபின் ஆகியன உள்ளன. உப்பு மற்றும் காஃபின் அதிகமாக உட்கொள்ளும் போது இந்த கூட்டுச் சேர்க்கை உடலில் இரத்த அழுத்த அளவை உயர்த்துகிறது. எனவே இவை இரத்த நாளங்களைச் சேதப்படுத்துவதால் பார்வை இழப்பு ஏற்படும் என நிபுணர்கள் கணிக்கின்றனர். இரத்தத்தில் சர்க்கரையின் அதிகரிப்பு வயது தொடர்பான மாகுலர் சிதைவுக்கு வழிவகுக்கும். இது விழித்திரையைச் சேதப்படுத்தும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். இதன் விளைவாக, இது பார்வையின் மையப் பகுதியில் குருட்டுத்தன்மையை ஏற்படுத்தும் எனக் கணிக்கப்படுகிறது.

எனவே,அந்த பார்வை இழப்பை ஏற்படுத்தும் உணவுகளை ஒதுக்கி விட்டு , நல்ல ஆரோக்கியமான உணவுகளை வாங்கி உண்ண, சுகாதார நிபுணர்கள் மக்களை கேட்டுக்கொள்கின்றனர்