உங்கள் வீட்டு சமையல் ரூமில் இந்த உணவுகள் இருந்தால் உங்கள் வீட்டு பெட்ரூமில் பிரச்சினை வரும்

 
bed

சமீபத்தில் நடைபெற்ற ஆய்வு ஒன்றில், மோசமான உணவுப்பழக்கம் நேரடியாக ஆண்களின் இனப்பெருக்க ஆரோக்கியத்தை பாதிக்கிறது என்று கண்டறியப்பட்டுள்ளது. டென்மார்க்கில் நடைபெற்ற இந்த ஆய்வில் அந்நாட்டைச் சேர்ந்த 3,000 இளம் ஆண்கள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டனர்.

பீட்ஸா, பர்கர், ஃப்ரைடு உணவுகள் மற்றும் இனிப்பு அதிகமுள்ள பொருள்களை வழக்கமாகச் சாப்பிடும் ஆண்களுடைய விந்தணுக்களின் எண்ணிக்கை, காய்கறிகள், பழங்கள், மீன் போன்ற ஆரோக்கியமான உணவுகளைச் சாப்பிடுபவர்களைக் காட்டிலும் 25% குறைவாக இருப்பது, அதில் கண்டறியப்பட்டது. இந்த ஆய்வு முடிவு அமெரிக்க மருத்துவர்கள் சங்கத்தின் இதழான JAMA-வில் வெளியிடப்பட்டுள்ளது.

தாம்பத்ய ஆரோக்யத்துக்கான உணவுகள்

தற்போதைய காலத்தில் அனைவரும் சுவைக்காகவே உணவுகளை உட்கொள்கின்றார்களே அன்றி உடல் ஆரோக்கியத்தினை கருத்தில் கொள்வதில்லை.

இவ்வாறு கட்டுப்பாடின்றி உள்ளெடுக்கும் சில வகை உணவுகளால் உடல் ஆரோக்கியம் பாதிக்கபடுவது மட்டுமன்றி குழந்தைப் பாக்கியத்தையும் வெகுவாக பாதிக்கின்றது என்று ஆய்வு ஒன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதாவது இந்த உணவு வகைகள் தாம்பத்திய உறவில் உண்டான நாட்டத்தினை வெகுவாக பாதிப்பதன் ஊடாக குழந்தைப் பாக்கியம் அற்றுப்போகின்றது.

பிரெஞ்ச் ப்ரைஸ்

பிரெஞ்ச் ப்ரைஸ் சுவை என்றால் அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள், ஆனால் உங்கள் தமனிகள் அடைபடாமல் இருக்க வேண்டுமானால் அதனை நீங்கள் தவிர்ப்பதே நல்லதே.

ஏதோ ஒரு வகையில் இரத்த ஓட்டம் பாதிக்கப்பட்டால், விறைப்பு செயல்பிறழ்ச்சி ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும்.

கொழுப்பு

சாச்சுரேட்டட் கொழுப்பு அடங்கியுள்ள உணவுகள் ஆரோக்கியமான செக்ஸ் வாழ்க்கைக்கு நல்லதல்ல. அவ்வகை உணவுகளை அளவாக உண்ணவும்; குறிப்பாக 30 வயதுக்கு மேலானவர்கள். மலட்டுத்தன்மையை உண்டாக்கும் உணவுகளில் ஒன்றான மாட்டிறைச்சியை தவிர்க்கவும்.

சர்க்கரை உணவுகள்

(Refined Sugar) ரிஃபைன்ட் சர்க்கரையை அதிகமாக கொண்டுள்ள உணவுகளை அதிகமாக உண்ணும் பழக்கம் கொண்ட ஆண்களுக்கு விறைப்பு ஏற்படுவதில் சிரமம் ஏற்படும்.

மேலும் இனப்பெருக்க ஹார்மோனான டெஸ்ட்டிரோஜன் சுரப்பதற்கு தடையாக இருக்கிறது.

துரித உணவுகள்

துரித உணவுகள் ஜங்க் உணவு வகைகளை கண்டிப்பாக தவிர்த்திட வேண்டும், இவ்வகை உணவுகளில் தீவனச்சேர்க்கை பொருட்கள் மற்றும் பதப்பொருட்கள் சேர்க்கப்பட்டிருக்கும், இது உங்கள் கருத்தரிப்பு திறனை வெகுவாக பாதிக்கும்.

டப்பாவில் அடைத்துவைக்கப்பட்ட  உணவுகள்

டப்பாவில் அடைக்கப்பட்ட கெட்டுப் போகாமல் இருப்பதற்கு இராசயனங்களை பயன்படுத்துவதால், அது இரத்த அழுத்தத்தை அதிகரித்து, உடலில் நீர்தக்க வைத்தலை அதிகரித்துவிடும்.

அதுமட்டுமல்லாமல் அதில் உள்ள மெர்குரி, கருச்சிதைவை ஏற்படுத்திவிடும்