நம் உடலுக்கு பல பெரிய நோய்கள் வராமல் காக்கும் இந்த உணவுகள்

பொதுவாக நட்ஸ் வகைகளில் பாதாமில் தான் அதிக அளவு நார்ச்சத்து நிறைந்துள்ளது.
தினமும் ஒரு கைப்படி பாதமை இரவில் ஊற வைத்து காலையில் சாப்பிடுவது மிகவும் நல்லது. நம் உடலில் சர்க்கரை மற்றும் கொழுப்பு வராமல் காக்கும் உணவுகள் இது போன்ற உணவுகள் பற்றி நாம் இப்பதிவில் காணலாம்
1.பாதாம் அஜீரணக் கோளாறைப் போக்கி உணவை நன்கு செரிமானம் அடையச் செய்கிறது.
2.அத்திப்பழத்தில் நார்ச்சத்து அதிகம் இருப்பதால், இது சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் நல்லது. 3.அத்திப்பழத்தில் உள்ள நார்ச்சத்துக்கள் செரிமான மண்டலத்தை மேம்படுத்துவதோடு, மலச்சிக்கல் பிரச்சனைகள் வராமல் தடுக்கிறது.
4.கேரட் மற்றும் பீட்ரூட்டில் நார்ச்சத்து நிறைந்துள்ளது. எனவே வாரத்தில் 2 முறை இவற்றை உணவாகவோ ஜூஸாவோ சாப்பிடுவது மிகவும் நல்லது.
5.இதை தொடர்ந்து சாப்பிடுவதால் ரத்த உற்பத்தி அதிகரிக்கவும் மற்றும் செரிமான கோளாறுகளை தடுக்கவும் உதவுகிறது.