ஒவ்வாமையை உண்டாக்கும் உணவு பொருட்கள்

 
curd

நம் கலாச்சாரத்தில் மாறி விட்ட உணவு பழக்கத்தால் நமக்கு ஒவ்வாமை என்ற அலர்ஜி பிரச்சினை உண்டாகிறது .இந்த ஒவ்வாமைக்கு பல காரணங்கள் கூறப்பட்டாலும் குறைவான நோய் எதிர்ப்பு சக்தியே இதற்கு முதல் காரணம் .சிலருக்கு இந்த உணவு அலர்ஜியால் முகம் ,கை கால் வீங்கி விடும் ,இன்னும் சிலருக்கு உதடு கூட வீங்கி விடும் ,இன்னும் சிலருக்கு மரணம் கூட ஏற்படும் ,மேலும் சைனஸ் ,ஆஸ்த்மா தொல்லை சிலருக்கு இந்த அலர்ஜியால் உண்டாகும் ,மேலும் எந்தெந்த உணவு பொருட்கள் அலர்ஜியை உண்டு பண்ணும் என்று இந்த பதிவில் பார்க்கலாம்

egg

1.பொதுவாக ஒவ்வாமையை , உணவுகளான  முட்டை, பசுப்பால், கெட்டி தயிர், கடல் மீன்கள்,போன்றவை உண்டு பண்ணும்

 2.மேலும் அலர்ஜியை கருவாடு, கோதுமை, மக்காச்சோளம், முந்திரி, ஆரஞ்சு, ஆப்பிள், எலுமிச்சை, சாத்துக்குடி, நார்த்தம்பழம், போன்ற பழங்களும் உண்டு பண்ணும்

3.மேலும் ஒவ்வாமையை வாழைப்பழம், பட்டாணி, பாதாம், சோயா பீன்ஸ், போன்ற உணவுகளும் உண்டு பண்ணும்

4.சிலருக்கு சாக்லேட் அலர்ஜியை உண்டு பண்ணும் .சாக்லேட்டில் உள்ள கொக்கோ, சோடா போன்றவைகள் அதிகம் ஒவ்வாமையை ஏற்படுத்துவதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன

5. மீன்களில் குளத்து மீன்களை விட கடல் மீன்கள் தான் ஒவ்வாமையை அதிகம் ஏற்படுத்துகின்றன.

6. கடல் மீன்களில் டைரமின் எனும் வேதிப்பொருள் இயற்கையாகவே உள்ளதால் இவைகளை அடிக்கடி சாப்பிட்டால் நமக்கு ஒற்றைத் தலைவலி உண்டாகலாம்.

7. சிலருக்கு இனிப்பு வகை  ஒவ்வாமையை உண்டாக்கும் .லட்டு, ஜாங்கிரி, கேசரி போன்ற இனிப்பு வகைகள் .அலர்ஜியை உண்டாகும்

8. சிலருக்கு பஜ்ஜி, போண்டா அலர்ஜியை உண்டாக்கும் .இது போன்ற கார வகைகளில் நிறம் கொடுக்க சேர்க்கப்படும் காரிய ஒக்சைட் பலரின் உடலுக்கு ஒத்துக் கொள்வதில்லை.