"நாங்க உங்க இதயத்துக்கு எதிரி "-என்று சொல்லும் உணவுகள்

 
heart

இதய நோய் காரணமாக இந்தியாவில் 33 வினாடிகளுக்கு ஒருவர் உயிரிக்கிறார் என்ற சமீபத்திய புள்ளி விவரம் அதிர்ச்சியளிக்கிறது .மேலும் இதய நோய் திடீரென்று வந்தாலும் அது பல நாட்களுக்கு முன்னரே நம் உடலில் பல அறிகுறிகளை காமிக்கும் .அதை நாம் அலட்சியப்படுத்துவதால் திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழப்பு ஏற்படுகிறது .மேலும் நாம் எடுத்து கொள்ளும் உணவு முறைகளும் இந்த இதய நோய் தாக்குதலுக்கு நம்மை ஆளாக்குகிறது ,அந்த உணவு வகைகளை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்

heart

இதய ஆரோக்கியத்திற்கு தவிர்க்க வேண்டிய சில விஷயங்கள்:

1. குளிர்பானங்கள்

பொதுவாக நாம் வெயிலில் சென்று விட்டு வந்ததும் நாம் புத்துணர்ச்சிக்காக, அடிக்கடி குளிர்பானங்களை உட்கொள்கிறோம். ஆனால் அதில் சோடாவின் அளவு அதிகமாக உள்ளது.இது நமக்கு ஆபத்தை உண்டு பண்ணுகிறது  இதனால் நம் இதயம் மிகவும் பாதிக்கப்படுகிறது. அதனை அடிக்கடி எடுத்துக் கொள்வது இதய நோய் அபாயத்தை பல மடங்கு அதிகரிக்கிறது.அதனால் இதய நோய் வராமலிருக்க இதை குறைத்து கொள்வது நல்லது

2.. எண்ணெய் உணவுகள்

பொதுவாக நாம் நாவிற்கு ருசியாக வறுத்த உணவுகளை அதிகம் சாப்பிடுகிறோம் .இந்தியாவில் பொரித்த உணவுகள் சாப்பிடும் பழக்கம் அதிகம் உள்ளது. பொரித்த உணவுகள் அதிக சுவையானதாக இருந்தாலும், அது ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல. இதன் காரணமாக, இரத்தத்தில் உள்ள கெட்ட கொலஸ்ட்ரால் அதிகரித்து, மாரடைப்பு அபாயத்தை அதிகரிக்கிறது. அதே போல் ஃபாஸ்ட் ஃபுட் அல்லது ஜங்க் ஃபுட் சாப்பிட விரும்பினால், உடனே அதை நிறுத்துங்கள்.அதனால் இதய நோய் வராமலிருக்க இதை குறைத்து கொள்வது நல்லது

3. பதப்படுத்தப்பட்ட இறைச்சிகள்&சிகரெட் ,மது

இந்தியாவில் மேலை நாட்டு உண்வுலான பாக்கட்டில் அடைக்கப்பட்ட இறைச்சிகள் சாப்பிடப்படுகிறது தற்போது பதப்படுத்தப்பட்ட இறைச்சி சாப்பிடும் பழக்கம் மிகவும் அதிகரித்துள்ளது. புரதம் கிடைக்கும் என்ற ஆசையில் இறைச்சியை உண்பவர்கள், இதனை அதிகம் எடுத்துக் கொள்கிறார்கள். ஆனால் பதப்படுத்தப்பட்ட இறைச்சியில் உப்பின் அளவு மிக அதிகமாக இருப்பதால், உயர் ரத்த அழுத்த பிரச்சனையை உண்டாக்கி, மாரடைப்புக்கு காரணமாகி நம் உயிரை பறிக்கிறது .மேலும் சிகரெட் மது பழக்கமும் இதய நோய்க்கு காரணமாகிறது