முளைகட்டிய பயறுகளில் எந்த நோய்க்கான மருந்து உள்ளது தெரியுமா ?

பொதுவாக சில சுகர் பேஷண்டுகள் மாத்திரை எடுத்து கொண்டாலே போதும் என்னவேனாலும் சாப்பிடலாம் என்று உணவு கட்டுப்பாடு இல்லாமல் இருக்கின்றனர் .இது தவறு .இதன் மூலம் சர்க்கரை அளவு கட்டுக்குள் வராமல் போகலாம் .எனவே எந்த மாதிரி உணவுக்கட்டுப்பாடுகளை சுகர் பேஷண்டுகள் மேற்கொள்வது அவசியம் என்று நாம் இப்பதிவில் காணலாம்
1. கார்போஹைட்ரேட் நிறைந்த உணவுகளை குறைத்து புரதம் , நார்ச்சத்து மற்றும் கொழுப்பு நிறைந்த உணவுகளை உண்டு வந்தால் சர்க்கரையின் அளவை குறைக்கலாம்
2.அசைவ உணவு பழக்கம் உள்ளவர்கள் அவரவர் பசி தீரும் அளவுக்கு ஏற்ப வேகவைத்த முட்டை அல்லது ஆம்லெட்டுடன் காலை உணவை ஆரம்பிக்கலாம்.
3. முளைகட்டிய தானியங்கள் கொண்ட சாலட்டுடன் காலை ஆகாரத்தை சைவர்கள் உண்ணலாம்.
4.பச்சையாக உண்ணும் காய்கறி மற்றும் முளைகட்டிய பயறுகளில் உள்ள நார்ச்சத்து மற்றும் விட்டமின்கள் சர்க்கரையின் அளவை கட்டுப்பாட்டுடன் வைத்துநம்மை ஆரோக்கியமாக வைக்கும் .
5.தினம் 12 டம்ளர் தண்ணீரையும் ,வெறும் வயிற்றில் இரண்டு க்ளாஸ் தண்ணீரும் தினசரி அருந்துவதைக் கட்டாயமாக்கி கொள்ள வேண்டும்