வயிறை பாதுகாக்க எந்த உணவுகள் உதவும் தெரியுமா ?
பொதுவாக நம் உடல் ஆரோக்கியம் மேம்பட வேண்டுமானால் அதற்கு நல்ல ஆரோக்கியமான உணவு முறையை பின்பற்ற வேண்டும் .அந்தவகையில் நம் வயிறை பாதுகாக்க எந்த உணவுகளை தொடணும் ,எந்த உணவுகளை தொட கூடாது என்று இந்த பதிவில் பார்க்கலாம்
1.உடல் ஆரோக்கியம் என்பது நம்முடைய வாழ்க்கை முறையுடன் சம்பந்தப்பட்டது
2.நாம் தினம் பதப்படுத்தப்பட்ட, பாக்கெட்டுகளில், டின்களில் அடைக்கப்பட்ட உணவுகளை அதிகம் சாப்பிடுகிறோம்.
3.அது மட்டுமல்லாமல் சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரையை நாம் சாப்பிடாத நாளே கிடையாது.
4.மேற்கூறிய இரண்டையும் நாம் முற்றிலும் தவிர்ப்பது வயிற்றுக்கு ஆரோக்கியம்.
5. நம் வயிற்றின் ஆரோக்கியத்துக்கு நார்ச்சத்துள்ள பழங்கள், கீரைகளை சாப்பிடவேண்டும்.
6.மேலும் பழங்களை சாறு பிழியாமல் அப்படியே சாப்பிடவேண்டும்.
7.நம் ஆரோக்கியத்துக்கு சியா விதைகள், ஆப்பிள், வெள்ளரி, சர்க்கரைவள்ளிக்கிழங்கு ஆகியவற்றை தோல் நீக்காமல் சாப்பிடவேண்டும்.
8.நம் ஆரோக்கியம் காக்கப்பட மைதா மாவில் செய்யப்பட்டவற்றை தவிர்த்து, கோதுமை சாப்பிடலாம்.
9.மேலும் ஆரோக்கியம் சிறக்க காய்கறிகள் மாதுளை, ஸ்ட்ராபெர்ரி போன்றவற்றை சாப்பிடுவதோடு, அதிக தாவர உணவுகளையும் சேர்த்துக்கொள்ளவேண்டும்.
10.நாம் ஒவ்வொருமுறை சாப்பிடும்போதும் அந்த சாப்பாட்டின் முக்கால் பங்கு காய்கறி இருப்பதுபோல் பார்த்துக்கொள்ளவேண்டும்.
11. நல்ல கொழுப்பு கொண்ட தேங்காய் பால், தேங்காயெண்ணெய், அவகாடோ, கடுகு எண்ணெய், ஆலிவ் ஆயில், கடலை எண்ணெய், நல்லெண்ணெய், நெய் ஆகியவற்றை சாப்பிடலாம்


