உங்களை எந்த வயதிலும் ஸ்லிம்மாக வைத்திருக்கும் இந்த உணவுகள்

 
lemon

பொதுவாக நாம் சில உணவுகளை உட்கொண்டால் உடலில் உள்ள கூடுதல் கொழுப்பை குறைக்கலாம்.அதற்கு கொஞ்சம் பொறுமையும் சகிப்புத்தன்மையும் அவசியம் .எந்த உணவுகளை எடுத்து கொண்டால் உடல் எடை குறைக்கலாம் என்று இந்த பதிவில் பார்க்கலாம்

1.பருப்பு மற்றும் தக்காளியை சேர்த்து சாப்பிட்டால், அதில் உள்ள பயோஆக்டிவ் பைட்டோகெமிக்கல் பிஎம்ஐ - கட்டுப்படுத்தி நம் உடல் எடை கூடாமல் காக்கிறது .

tomato

2.மேலும், பருப்பில் உள்ள புரதம் மற்றும் நார்ச்சத்து வயிற்றை நிரப்புவதோடு தசைகளை அதிகரி த்து நம் ஆரோக்கியம் காக்கிறது .

3.பச்சை தேயிலை மற்றும் எலுமிச்சை ஆகிய இரண்டும்  தொப்பையை குறைக்க உதவுகிறது.

4.இந்த இரண்டு பொருள்களையும் சாப்பிட்டால், இதில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள், வைட்டமின் சி மற்றும் கேட்டசின்கள் ஆகியவை நம் உடலுக்கு கிடைத்து ஆரோக்கியம் காக்கும்

5.பொதுவாக அன்னாசி மற்றும் எலுமிச்சை சாற்றை நாம் உணவில் சேர்த்துக் கொள்வதுகொழுப்பை குறைக்க உதவுகிறது.

6.புளிப்பு பொருளான மேற்சொன்ன  இரண்டு பொருள்களை சாப்பிடுவது வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்க உதவுகிறது.

7.மேலும் பிரேசில் பருப்பு மற்றும் அத்திப்பழத்தை ஒன்றாக சாப்பிடுவது உடல் எடையை குறைக்க உதவும்.

8.மேலும், இதில் புரதம், கார்போஹைட்ரேட் இருப்பதால் நம் உடல் எடையை குறைத்து கொழுப்பை கரைக்கிறது .

9.அதனால் இவற்றை வெறும் வயிற்றில் சாப்பிடுவது நல்லது.

10.மேலும், இவற்றை சாப்பிடுவதால் வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் போதுமான அளவில் கிடைக்கும்.