உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் உணவுகள்

பொதுவாக நாம் நோயின்றி வாழ நம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அவசியம் .இந்த இம்மியூனிட்டி பவர் பல்வேறு உணவுகளில் ஏராளமாய் இருக்கிறது ,நாம் அன்றாடம் சாப்பிடும் எந்த உணவுகள் மூலம் இந்த நோய் எதிர்ப்பு சக்தியை பெறலாம் என்று இந்த பதிவில் பார்க்கலாம்
1.உடலிற்கு தேவையான இரும்பு சத்து பேரீச்சம்பழத்தில் அதிகளவாக நிறைந்துள்ளது.
2.பேரீச்சம்பழத்தை தேனில் ஊறவைத்து தினமும் சாப்பிட்டு வந்தால் நோய் எதிர்ப்பு சக்தி உடலில் வேகமாக அதிகரிக்கும்.
3.நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதில் லெமன் மிக முக்கியமானது. எலுமிச்சையில் வைட்டமின்-சி அதிகம் நிறைந்துள்ளது
4..நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதில் பூண்டின் பங்கு முக்கியமானது.
5.மஞ்சள் இயற்கையாக கிருமிகளை அழிக்கும் திறன் கொண்டது. மஞ்சள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதுடன் இரத்தத்தை சுத்திகரிக்கவும் உதவுகின்றது
6.முட்டையில் அதிகளவு புரதங்கள் நிறைந்திருப்பதால் திசுக்களை சீரமைக்கவும் உடலுறுப்புகள் வளரவும் உதவும்.
7.எலும்புகளை பலமாக்கவும் முட்டை உதவும்.
8.தேங்காய் எண்ணையும் தேங்காயும் எடுத்துக்கொள்ளுவதன் மூலம் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க முடியும்.
9.வெங்காயம் புற்றுநோய்க்கு எதிராகவும் செயல்படுகின்றது. வெங்காயத்தை அதிகளவு உணவில் சேர்ப்பதன் மூலம் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கலாம்.
10.அடிக்கடி நோய்வாய்ப்படுபவர்கள் தினமும் ஒரு பெரிய நெல்லிக்காய் சாப்பிட்டு வந்தால் நல்ல பலனை அடையலாம்.
11.கொய்யாப்பழத்தை ஏழைகளின் ஆப்பிள் என்று கூறுவார்கள். ஆப்பிளை விட அதிகமான சக்துக்கள் கொய்யாப்பழத்தில் நிறைந்துள்ளன..
12.இரத்தத்தில் வெள்ளை அணுக்களின் அளவை அதிகரிக்க பாதம் முக்கிய பங்கு வகிக்கின்றது. பாதாமை நீரில் ஊற வைத்து சாப்பிடும் பொழுது சிறந்த பலனை பெற முடியும்.