மீன் வகைகள் உங்க உடலில் எந்த உறுப்பை பாதுகாக்கும் தெரியுமா ?.

 
Heart attack

பொதுவாக  மாரடைப்பு நோய் வராமல் தடுக்க  நம் முன்னோர்கள் கூறியபடி சிலவகை பழக்க வழக்கத்தை பற்றி பார்க்கலாம்
1.உங்கள் உணவில் உப்பை குறையுங்கள் ,உப்பு காரணமாக , உங்கள் இரத்த அழுத்தமும் அதிகமாக இருக்கலாம் அதாவது இதய நோய் அல்லது பக்கவாதம் ஏற்படுவதற்கான ஆபத்து உங்களுக்கு அதிகம்.
2.அதிக சுகர் உள்ள உணவால் உங்களுடைய ரத்த அழுத்தம் அதிகரிக்கும் மற்றும் நீரிழிவு மேலும் இதய நோய்கள் ஏற்படுவதற்கு வழிவகுக்கும் இதனால் சர்க்கரையின் அளவை நீங்கள் அடிக்கடி செக் செய்தல் நலம்
3.வெண்ணெய், நெய், கொழுப்பு நிறைந்த இறைச்சி, பால் கொழுப்புகள் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகள் பேக்கரி உணவுகள் கேக் போன்றவற்றில் அதிகமாக கொழுப்பு காணப்படுகிறது.இவற்றினை தவிர்த்து இதய நலன் பேணுங்கள்

heart
4.பழங்கள் மற்றும் காய்கறிகளில் உள்ள ஊட்டச்சத்துக்கள் வைட்டமின்கள் தாதுக்கள் மற்றும் நார்ச்சத்து உட்பட உங்கள் இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது
5.உங்கள் உடலில் பொட்டாசியத்தின் அளவு அதிகரிக்க ஒரு நாளைக்கு குறைந்தது ஐந்து காய்கறிகள் அல்லது பழங்களை எடுத்துக் கொள்ளுங்கள் இதன் மூலம் உடலில் கொழுப்பின் அளவு குறைக்கப்படும்.
6. மத்தி, சல்மான், கானாங்கெளுத்தி, மற்றும் புதிய டூனா போன்ற எண்ணெய்  மீன்களை அதிகமாக சாப்பிட்டால் இதய நலன் காக்கலாம்
7.புகை,மது  ,மன அழுத்தம் கூடவே கூடாது