இதயத்துக்கு இந்த உணவெல்லாம் நன்மை செய்யும்
பொதுவாக இதய நோய் இப்போதெல்லாம் வயது வித்தியாசம் இன்றி அனைவரையும் தாக்குகிறது .இந்த இதய நோயை எப்படி தடுக்கலாம் என்று இப்பதிவில் நாம் காணலாம்
1.இன்றைய காலகட்டத்தில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் இதய நோய் பிரச்சனைகளால் பாதிக்கப்படுகின்றனர். அதில் இருந்து பாதுகாக்க நாம் என்னென்ன செய்ய வேண்டும் என்று பார்க்கலாம்.
2.இதயத்தை சீராக்க ஐந்து உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும்.
3.இதய துடிப்பை சீராக்க நாம் பொட்டாசியம் நிறைந்த உணவுகளை அதிகமாக எடுத்துக் கொள்ள வேண்டும்.
4.முதலாவதாக எடுத்துக் கொள்ள வேண்டிய உணவு இளநீர். இதில் கால்சியம் பொட்டாசியம் நிறைந்துள்ளது.
5.வைட்டமின் பி மற்றும் சி நிறைந்துள்ள சர்க்கரைவள்ளி கிழங்கு சாப்பிட்டால் இதயத் துடிப்பு பிரச்சனைக்கு சிறந்தது.
6.மேலும் வாழைப்பழத்தை தினமும் எடுத்துக்கொள்ள வேண்டும்.
7.இது மட்டும் இல்லாமல் ராஜ்மாவில் புரதம் பொட்டாசியம் நார்ச்சத்து நிறைந்துள்ளது. இது இதயத்திற்கு சிறந்ததாக இருப்பது மட்டும் இல்லாமல் உடல் எடை குறைக்கவும் உதவுகிறது.
8.குறிப்பாக கீரையை வேக வைத்து உணவில் சேர்த்து சாப்பிடும் போது அது நம் உடலுக்கு ஊட்டச்சத்துக்களை கொடுத்து உங்களை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவுகிறது.