எப்போதும் மூளை கோளாறு வராமல் காக்கும் இந்த உணவு வகைகள்
பொதுவாக நாம் அன்றாடம் சாப்பிடும் பல உணவுகள் நம் முன்னோர் நம் ஆரோக்கியம் காக்க விட்டு சென்ற உணவுகள் ஆகும் .அந்த வகையில் நம் முன்னோர் சாப்பிட்ட தயிரில் பல்வேறு மருத்துவ குணம் உள்ளது ,அந்த தயிரின் நன்மைகள் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்
1.பொதுவாக இன்றைய தலைமுறையை விட நம்முடைய முன்னோர்கள் சாப்பிட்ட உணவுகள் அனைத்துமே அவர்களது ஆயுளை அதிகப்படுத்தியது என்று கூறலாம்
2.பழைய கால உணவால் அவர்களது உடல் ஆரோக்கியத்தை வலுப்படுத்துவதுடன், எந்த நோய்களும் அண்டாமல் அவர்களை காப்பாற்றியது .
3.ஆனால் , நாம் நம்முடைய முன்னோர்கள் சாப்பிட்டு வந்த உணவுகளை சாப்பிடுவதை அநாகரிகமாக நினைத்து அவற்றை ஒதுக்கி தள்ளி விடுகிறோம் .
4.ஆனால், அந்த உணவுகள் தான் அவர்கள் ஆரோக்கியமாக வாழ்வதற்கும், நீண்ட ஆயுளுடன் வாழ்வதற்கும் உதவியது என்பதை நாம் மறந்து விட கூடாது
5.இதனால் இன்று சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே மேலை நாட்டு உணவுகளை தான் விரும்பி உண்டு பல நோய்களுக்கு ஆளாகிறோம்
6.பழைய கால உணவுகளில் தயிர் நமது உடல் ஆரோக்கியத்தை எவ்வாறு மேம்படுத்துகிறது என்று பார்ப்போம்.
7.தயிர் போன்ற ப்ரோபையோடிக் உணவுகள் உண்டால் நமது குடல் பகுதிகளில் உள்ள நுண்ணுயிரிகளின் செயல்பாடுகள் அதிகரித்து,அது நம் உடலை காக்கிறது
8.இந்த தயிர் நமது உடலில் எந்த நோயும் தாக்காமல் இருப்பதற்கு, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.
9.மேலும், இந்த தயிர் இது நமது மூளையின் செயல்பாட்டை அதிகரித்து நம் மூளை செயல்பாட்டை காக்கிறது ,
10.மேலும், இந்த தயிர் நாம் பதற்றத்துடன் செயல்படுவதை தடுத்து, நிதானமாக செயல்பட உதவுகிறது.
11.மேலும், மேலும், இந்த தயிர் மனநலம் சம்பாந்தமான நோய்களையும் குணப்படுத்துவதில் முக்கிய பங்கு வகித்து எந்த வயதிலும் மூளை கோளாறு வராமல் காக்கிறது

