உடல் எடை குறைய உதவும் உணவுகள் எவை தெரியுமா ?
பொதுவாக உடல் எடை குறைப்புக்கு அணைவரும் இப்போது போராடி வருகின்றனர் .அதற்கு நிறைய இயற்கை வழிகள் உண்டு ,கேரட்டுடன் தேன் கலந்து சாப்பிட்டால் உடல் எடை குறையும் .கரிசலாங்கண்ணி கீரையை பாசி பருப்புடன் கலந்து சாப்பிட உடல் எடை குறையும் .மேலும் இதுபோன்ற பல இயற்கை வழிகளை இந்த பதிவில் பார்க்கலாம்
1.உடல் எடை குறைய இரவு உணவில் நீலம், ஊதா, தங்க நிறம், வெள்ளை ஆகியவற்றில் உள்ள பழங்கள்,அதிகம் சேர்த்து கொள்ளலாம்
2. உங்கள் உடல் எடை குறைந்து ஸ்லிம்மாக காட்சி தர இரவில் நீல நிற காய்கறிகளைச் சேருங்கள்.
3.மேலும் நீலம், கருஞ்சிவப்பு ஆகிய நிறங்களில் உள்ள பழங்கள் காய்கறிகளில் உள்ள தாவரச் சத்துக்கள் உணர்ச்சிகளை மெல்ல அமைதிப்படுத்தி விடும் .பின்னர் தூக்கமின்மை பிரச்சினை நீங்கும்
4.இரவில் ஒரு கிண்ணம் சாதம், ஒரு கிண்ணம் தயிர், பீட்ரூட், கத்தரிக்காய் லேசாக அவிய வைத்து ஒரு கிண்ணம், ஒரு ரொட்டி என்று சாப்பிட ஆரோக்கியம் மேம்பட்டு உடல் எடை குறையும்
5.பீட்ரூட் சாறு ஒரு கிளாஸ், ஒரு கிண்ணம் தயிர் சாதம், ஒரு ரொட்டி, கத்தரிக்காய் அவியல் அரை கிண்ணம் என்று சாப்பிட உடல் எடை குறைய வாய்ப்புள்ளது
6.எடை ,இடை குறைந்து ஸ்லிம்மாக காட்சிதர மாதத்திற்கு ஐந்து நாட்கள் மட்டும் இந்த உணவுத் திட்டத்தைப் பின்பற்றினால் எடை குறைந்து அழகாக மாறிவிடுவீர்கள்.

