அல்சைமர் நோய் தாக்காமலிருக்க எந்த உணவை தவிர்க்கணும் தெரியுமா ?
பொதுவாக முதிய வயதில் பல்வேறு நோய்கள் நம்மை தாக்கும் .அதில் குறிப்பாக அல்சைமர் என்ற ஞாபக மறதி நோய் பலரை தாக்குகிறது .இந்த நோய் தாக்காமலிருக்க சில வகை உணவுகளை தவிர்க்க வேண்டும் .அந்த உணவுகள் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்
1.அல்சைமர் நோய் தாக்காமலிருக்க பதப்படுத்தப்பட்ட உணவுகளை தவிருங்கள் .இந்த உணவில் சர்க்கரை சேர்க்கப்பட்ட கொழுப்புகள் மற்றும் உப்பு அதிகமாக இருக்கும்.
2.அந்த அல்சைமர் உண்டாக்கும் உணவு வகைகள் சிப்ஸ், இனிப்புகள், உடனடி நூடுல்ஸ், மைக்ரோவேவ் பாப்கார்ன், கடையில் வாங்கும் சாஸ்கள் மற்றும் ரெடிமேட் உணவுகள் போன்ற உணவுகள் .
3.மேலே சொன்ன இந்த உணவுகளில் பொதுவாக கலோரிகள் அதிகம் மற்றும் பிற ஊட்டச்சத்துக்கள் குறைவாக இருக்கும்.
4.அந்த மேலே சொன்ன உணவுகள் நம் உடல் எடை அதிகரிப்பை ஏற்படுத்தும், இது உங்கள் மூளை ஆரோக்கியத்தில் எதிர்மறையான விளைவை ஏற்படுத்தும்.
5.அது மட்டுமல்லாமல் வறுத்த மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகளும் அல்சைமரை உண்டாக்கும் .இதை அதிகம் உண்பவர்களின் சிந்தனைத் திறன் மோசமாக பாதிக்கப்படுகிறது.
6.இந்த உணவுகள் மூளைக்கு இரத்தத்தை வழங்கும் இரத்த நாளங்களை சேதப்படுத்தி மூளையை காயப்படுத்தும்.
7.அதனால் அல்சைமரை உண்டாக்கும் இந்த உணவுகளை அதிகமாக சாப்பிடுவதை தவிர்த்து விடுங்கள்
8.இந்த உணவுகள் மூலம் மனஅழுத்தம் அல்லது அல்சைமர் நோய் ஏற்படும் அபாயத்தை குறைத்து கொள்ளுங்கள்


