கர்ப்பிணிகள் மீன் சாப்பிட்டால் குழந்தை எப்படி பிறக்கும் தெரியுமா ?

 
fish

பொதுவாக ஞாபக மறதிக்கு வயது முதிர்ச்சி ஒரு காரணமென்றால் ,குழந்தை கருவிலிருக்குபோது தாய் எடுத்து கொள்ளும் உணவும் மற்றொரு காரணமென்று ஆராய்ச்சியாளர்கள் கண்டு பிடித்துள்ளனர் .ஒமேகா-3  அதிகமுள்ள உணவுகளை தாய் எடுத்து கொண்டால் பிறக்கும் குழந்தைக்கு ஞாபக சக்தி அதிகமாக இருக்கும்

கர்ப்பத்தின்போது மீன்கள் அதிகம்

உண்ட தாய்களின் குழந்தைகளின்

புத்திக் கூர்மையும், அவர்களது கை

மற்றும் கண் நல்ல செயல்பாடுடன்

காணப்படும்.

fish

கர்ப்ப காலங்களில் மீன்கள் மிக

அதிகமாக உண்ணும் தாய்மார்களுக்குப்

பிறக்கும் குழந்தைகள் மிகுந்த

புத்திக் கூர்மையுடன் இருக்கும்.

அந்த சிசுக்கள் வயிற்றில் இருக்கும்

போது மூளை தொடர்பான நோய்கள்

தாக்குவதும் குறைவாக இருக்கும்.

மூளை வளர்ச்சிக்கு தேவையான

முக்கியமான ஒமேகா-3 அதிகமாக

மீன்களில் காணப்படுகிறது.

பொதுவாக காய்கறிகள் கீரைகள்

போன்றவற்றை அதிகமாக சாப்பிட்டால்,

ஞாபக சக்தி அதிகரிக்கும். பசலைக்

கீரை, ப்ராக்கோலி, லெட்யூஸ், காலிஃப்ளவர்

மற்றும் ஸ்புரூட்ஸ் போன்றவற்றில் ஞாபக

சக்தியை அதிகரிக்கும் பொருள் இருப்பதோடு,

வைட்டமின்கள் மற்றும் கனிமச்சத்துக்கள்

அதிகம் உள்ளதால், உடலும் ஆரோக்கியத்துடன்

இருக்கும்.அதனால் ஒரு தாய் தனது சேய் வயிற்றில் இருக்கும்போது அதிகமாக மீன் சாப்பிடுவது பிறக்கப்போகும் குழந்தைக்கு நல்லது என்பதால் அதை சாப்பிட்டு குழந்தையை மூளை வளர்ச்சியோடு வைத்திருங்கள்