எந்தந்த மீனில் எந்தெந்த சத்துக்கள் அடங்கியுள்ளது -பட்டியலை பார்த்து சாப்பிடுங்க

 
fish

அசைவம் சாப்பிடுவோரில் மீனை விரும்பி சாப்பிடுவோர் பலர் இருக்கின்றனர் .அசைவத்தில் ஆடு ,மாடு ,கோழியை விட மீனில் பல சத்துக்கள் அடங்கியுள்ளன .குறிப்பாக ஒமேகா -3 என்ற வைட்டமின் சத்து மீனில் இருப்பதால் பல மருத்துவர்கள் இதை சிபாரிசு செய்கின்றனர் .இந்த பதிவில் எந்தந்த மீனில் என்னென்ன சத்துக்கள் அடங்கியுள்ளது என்று பார்க்கலாம் 
நம் உடலுக்கு அதிக ஊட்டச்சத்து தரக்கூடிய ஒமேகா 3 உள்ள மீன் வகைகள் பற்றி  படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

fish

கானாங்கெளுத்தி மீன்
இந்த கானாங்கெளுத்தி மீன் கருவாடாகவும் பயன்படுத்தப்படுவதால் இதில் நிறைய புரதம் அடங்கியுள்ளது , அதிகளவில் இந்த மீனில் ஒமேகா-3 வைட்டமின் பி12, நியாசின், மக்னீசியம், செலினியம், பொட்டாசியம், மற்றும் இரும்பு சத்துக்கள்  அதிகமாக நிறைந்துள்ளன
 .

மத்தி மீன்
இந்த மத்தி மீனில் புரதச்சத்து மற்றும் ஆரோக்கியமான கொழுப்பு அமிலங்கள் அதிகம் நிறைந்துள்ளன மேலும் இதில் வைட்டமின் டி, கால்சியம், ஊட்டச்சத்து மற்றும் நியாசின் அதிகம் நிறைந்துள்ளன.
இதில்  இருக்கக்கூடிய முட்கள் மிகவும் மெல்லிய தன்மையில் இருப்பதால் இந்த மீனை முட்களுடன் கூட சாப்பிட்டால் மிகவும் சுவையாக இருக்கும்  


நெத்திலி மீன்
 பிரபலமான நெத்திலி மீனில் புரதச்சத்து, பொட்டாசியம், கால்சியம், செலினியம், வைட்டமின் பி 12 அதிகமாக நிறைந்துள்ளன.
  அனைத்து மளிகை கடைகளில் குறைந்த விலையில் நெத்திலி மீன் கருவாடு கிடைக்கும்.

இந்த மீனில் உள்ள ஊட்டச்சத்துக்கள் 
சூரை மீன்
கடல் வகை சூரை  மீனில் ஒமேகா-3 கொழுப்பமிலங்கள், மெக்னீசியம், புரதச்சத்து, வைட்டமின் பி12, மற்றும் நியாசின் ஆகியவை அதிகம் நிறைந்துள்ளன. 
சால்மன் மீன்
 சால்மன் மீனில் அதிக அளவு ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் புரதம், நியாசின், பொட்டாசியம், மெக்னீசியம் மற்றும் வைட்டமின்கள் நிறைந்துள்ளன,