இருதயம் சம்பந்தமான பிரச்சனை உள்ளவர்கள் மீன் சாப்பிடலாமா ?
பொதுவாக பல்வகை பழங்களும் ,காய் காய்கறிகள் மற்றும் கீரை வகைகள் மற்றும் கொட்டைகள் நம் இதயத்துக்கு நலம் சேர்ப்பவை .இந்த பதிவில் எந்த பழங்கள் மற்றும் கீரைகள் நம் இதயத்துக்கு வலு சேர்ப்பவை என்று பார்க்கலாம்
1. பல பழங்கள் இதயத்திற்கு ஆரோக்கியமானவை மற்றும் கரையக்கூடிய நார்ச்சத்து கொண்டவை, இது எல்டிஎல் அளவைக் குறைக்க உதவும்.
2.ஆப்பிள், திராட்சை, சிட்ரஸ் பழங்கள் மற்றும் ஸ்ட்ராபெர்ரிகளில் பெக்டின் என்கிற கரையக்கூடிய நார்ச்சத்து உள்ளது.
3.பழங்களில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் நிறைந்துள்ளன. அதனால் இருதய நோய் பாதிப்பு ஏற்படாமல் தடுக்கும்.
4.வால்நட் போன்ற கொட்டைகள் இருதயத்துக்கு வலு சேர்க்கின்றன.
5.. மிகவும் ஊட்டச்சத்து நிறைந்த கொட்டைகளை சாப்பிடுவது ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த உதவுகிறது.
6.. கொலஸ்ட்ராலைக் குறைக்கும் இந்தக் கொட்டைகளை தினமும் உட்கொள்வது இதய நோய் அபாயத்தைக் குறைக்கும்.
7.பூண்டில் அலிசின் எனும் இதயத்தை பாதுகாக்கும் அற்புதமான பொருள் நிறைந்திருக்கின்றது.
8. இது கொலஸ்ட்ராலை வேகமாக குறைப்பதுடன் நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கின்றது.
9.அதிகப்படியான கொலஸ்ட்ரால் காரணமாக தமனிகளின் வீக்கம் மற்றும் கடினமாவதை தடுக்க வெங்காயம் உதவுகிறது.
10.. கீரை வகைகளில் பசலைக்கீரை கெட்ட கொழுப்பை கரைப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றது.
11.. இருதயம் சம்பந்தமான பிரச்சனை உள்ளவர்கள் உணவுகளில் மீன்கள் இருக்கும் படி பார்த்துக்கொள்ளுவது மிகவும் நல்லது.


